தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஜூன் 11 முதல் 19 வரை ஆலோசனை

1 Min Read

சென்னை, மே 31  மக்களவைத் தேர்தல் விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின், ஜூன் 11 முதல் 19-ஆம் தேதி வரை 4 நாட்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்துகிறார்.

மக்களவை பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள்அமலில் இருப்பதால், அரசு தொடர்பான எந்த நிகழ்வுகளையும் நடத்த முடியாத நிலை உள்ளது.

சட்டப்பேரவை கூட்டம்

தேர்தல் முடிவுகள் வெளியான பின், வரும் ஜூன் 6-ஆம் தேதியுடன் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படும் என தெரி கிறது. இதையடுத்து, அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜூன் இறுதி வாரத்தில் சட்டப்பேரவைக் கூட்டமும் நடத் தப்பட வாய்ப்புள்ளது.
இந்த சூழலில், ஜூன் 11 முதல் 19 வரையிலான காலகட்டத்தில், 4 நாட்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் பல்வேறு திட்டங்கள் குறித்து தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்த உள்ளார்.

குறிப்பாக ஜூன் 11-ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆட்சியர்கள் மற்றும் ஜூன்13-ஆம் தேதி, திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தொடர்ந்து, ஜூன் 15-ஆம் தேதிகோவை, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கரூர் மாவட்டஆட்சியர்களுடனும், ஜூன் 19-ஆம் தேதி மதுரை, நெல்லை, கன்னியா குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார்.

நாமக்கல் கவிஞர் மாளிகை யில் நடைபெறும் இந்த ஆலோச னைக்கூட்டத்தில் ஆட்சியர்களின் கருத்துகளைப் பெற்று, அதன் அடிப்படையில் அடுத்த கட்ட பணிகள் நடைபெற உள்ளதாக தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *