சட்டங்களின் பெயர்களை மாற்றுவதை கைவிடாவிட்டால் ஒன்றிய அரசுக்கு எதிராக சட்ட ரீதியாக போராட்டம் – பார் கவுன்சில் அறிவிப்பு

2 Min Read

சென்னை, செப். 2– மூன்று இந்திய சட்டங்களை ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்வதற்கு தமிழ்நாடு -புதுச்சேரி பார் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் – 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் -1973 மற்றும் இந்திய சாட்சிய சட்டம் – 1872 ஆகிய வற்றின் பெயர்களை பாரதிய நியாய சன்ஹிதா – 2023, பாரதிய நகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா – 2023, பாரதிய சாக்ஷயா அதிநயம் – 2023 என்ற பெயர்களில் ஹிந்தி யில் பெயர் மாற்றம் செய்யும் வகையிலும், சட்டப் பிரிவுகளை மாற்ற வழிவகை செய்யும் வகையிலும் 3 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது. 

இதற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக்குரைஞர்கள் சங்கத் தினர் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலை வர் பி.எஸ்.அமல்ராஜ் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: 

ஆங்கிலத்தில் உள்ள இந்த மூன்று சட்டங்களின் பெயர் களை ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்வதையும், இதில் உள்ள சட்டப் பிரிவுகளின் வரிசைகளை தமது வசதிக்கேற்ப மாற்று வதையும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் எதிர்க்கிறது. 

இவ்வாறு இந்திய சட்டங் களின் பெயர்களை ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்வது என்பது அரசமைப்புச் சட்டத் துக்கு எதிரானது. எனவே ஒன்றிய அரசின் இத்தகையச் செயலுக்கு எங்களது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம். 

ஒன்றிய அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம். சட்டங் களில் உள்ள சட்டப்பிரிவுகளின் வரிசையை புதிதாக மாற்றிய மைத்தால் நீதிபதிகளும், வழக் குரைஞர்களும், சட்ட மாணவர் களும் மீண்டும் முதலில் இருந்து சட்டம் கற்க வேண்டிய கட் டாயம் ஏற்படும்.

எனவே ஹிந்தி பெயர் மாற்றம், சட்டப் பிரிவுகளின் வரிசையை மாற்றும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண் டும்.  இந்த மூன்று சட்டங்களின் பெயர்களை ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்வதையும், சட்டப் பிரிவுகளின் வரிசைகளை மாற்றுவதையும் ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் என நம்புகிறோம்.

மீறி அமல்படுத்தப்பட்டால் அதை சட்ட ரீதியாக எதிர் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்வின்போது, பார் கவுன்சில் துணைத் தலை வர் வி.கார்த்திகேயன், செயலர் சி.ராஜாகுமார் ஆகியோர் உட னிருந்தனர்.

சட்டங்களில் உள்ள சட்டப் பிரிவுகளின் வரிசையை புதிதாக மாற்றியமைத்தால் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், சட்ட மாண வர்களும் மீண்டும் முதலில் இருந்து சட்டம் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *