புவனேசுவர், மே 30 பிஜூ ஜனதா தளத்தின் மூத்த தலைவர் வி.கே.பாண்டியன் செய்தி யாளர்களிடம் கூறிய தாவது:
6 ஆவது முறையாக நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம் ஆட்சி அமைவது தவிர்க்க முடியாததாகி உள்ளது. நடந்து முடிந்த 3 கட்ட தேர்தலிலேயே நாங்கள் ஆட்சி அமைக்க பெரும்பான்மையை பெற்றுவிட்டோம். இறுதி கட்ட வாக்குப்பதிவு பிஜூ ஜனதா தளத்தின் கோட்டையாகக் கரு தப்படும் பகுதிகளில் நடக்க உள்ளது.
இங்கு பாஜ போட்ட முதல் ‘சேம் சைடு கோல்’ அல்லது தவறு என்னவென்றால், நவீன் பட்நாயக் குறித்து தவ றாகப் பேசியதுதான். மரியாதைக்குரிய தலை வரான பட்நாயக்கை தவறாகப் பேசுவதை ஒடிசா மக்கள் ஒருபோதும் ரசிக்க மாட்டார்கள். இதே போல, 70 லட்சம் பயன் பெறும் மிஷன் சக்தி திட்டத்தை ரத்து செய்வோம் என்றார்கள். மாநிலத்தில் 90 சதவீத மக்கள் பயன் பெறும் ‘பிஜூ ஸ்வாஸ்த்ய கல்யாண் யோஜனாவை’ நிறுத்திவிட்டு, ‘ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை’ கொண்டு வருவோம் என பாஜ கூறியது அவர்களுக்கே எதிரானது.
ஒடிசா பெண்கள் புரிந்து கொண்டுள்ளனர்!
‘சுபத்ரா யோஜனா’ திட்டத்தின் மூலம் ஒடிசாவில் ஒவ்வொரு பெண்களுக்கும் ரூ.50 ஆயிரம் வழங்குவதாக பாஜ கூறியிருக்கிறது. அப்படிப் பார்த்தால், ரூஒரு லட்சம் கோடி செலவழிக்க வேண்டியிருக்கும். ஏற்கெனவே, ஒவ்வொ ருக்கும் ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி பாஜ ஏமாற்றியதைப் போல, இதுவும் வெறும் வார்த்தை ஜாலம்தான் என்பதை ஒடிசா பெண்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்றார் அவர்.