30.5.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை
* பாஜக பத்தாண்டு கால ஆட்சியில் சிறு தொழில்கள் நசுக்கப்பட்டு உள்ளன, ராகுல் கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* 1982ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய காந்தி திரைப்படம் வெளியாகும் வரை, காந்தியாரைப் பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை என்று பிரதமர் மோடியின் பதிவுக்கு காங்கிரஸ் கண்டனம். அப்படியா? என ராகுல் நக்கல்.
* தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, தமிழ்நாட்டில் உள்ள 193 சிறப்பு பள்ளிகளில் படிக்கும் 8,000 மாணவர்கள் (மாற்றுத்திறனாளிகள்) பயன்பெறும் வகையில் மதிய உணவு வழங்கப்படும்.
* பிரதமர் மோடியை கடவுளின் அவதாரம் என்று ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறதா? கெஜ்ரிவால் கேள்வி.
தி டெலிகிராப்
* ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை தவிர்க்க அக்னி வீர் திட்டத்தை மோடி அரசு அறிமுகப்படுத்தியது. 6 மாத பயிற்சிக்குப் பிறகு அரசு இளைஞர்களை எல்லைகளுக்கு அனுப்புகிறது, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களை வேலையில்லாமல் வீட்டுக்கு அனுப்புகிறது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment