பெரம்பலூர், மே 30- தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் – நாடாளுமன்ற உறுப்பினர், மேனாள் ஒன்றிய அமைச் சர் ஆ.இராசா, அவர்களின் வாழ்விணை யர் மு.அ.பரமேஸ்வரியின் 3-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நேற்று (மே.29) பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்பி., அவரது மகள் மயூரி இராசா, போக்கு வரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங் கர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பா ளர்கள் மாவட் டத் தலைவர் சி.தங்கராசு அவர்களின் தலைமையில் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திர சேகர் (திருவையாறு), வசந்தம் கார்த்தி கேயன் (ரிஷிவந்தியம்), (சாக்கோட்டை அன்பழகன் (கும்பகோணம்), எம்.பிரபா கரன் (பெரம்பலூர்), சீ.கதிரவன் (மண் ணச்சநல்லூர்), கு.சின்னப்பா(அரியலூர்), பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பா ளர் வீ.ஜெகதீசன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், ஆ.இராசா குடும்ப உறுப்பினர்கள் ஆ.ராமச்சந்திரன், மாவட்ட அறங்காவ லர் குழு தலைவர் ஆ.கலியபெருமாள், ஆ.சிவசண்முகம், வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகை சிவசண்முகம், ரா.பச்சமுத்து, விஜயாம்பாள் பச்சமுத்து, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் பொறியாளர் இரா.ப.பரமேஷ் குமார், ரெங்கராஜ், கமலா ரெங்கராஜ், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட் பாளர் கே.என்.அருண் நேரு, உயர்நீதிமன்ற அரசு சிறப்பு வழக் குரைஞர் டி.சீனிவாசன், பெரம்பலூர் அரசு வழக்குரைஞர் சந்தான லெட்சுமி, உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.