கோவை, மே 30- பெரியாரியல் கொள் கைகளை ஏற்று சமத்துவம் சமுதாயம் அமைய பகுத்தறிவு, சுயமரியாதை, மனிதநேயம், சமநீதி , சமுகநீதி கருத்து களை முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் ஏற்றுக்கொண்டு ஆசிரியர் தலைமை யில் அணிவகுத்து சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என தொண்டாற்றும் உழைக் கும் தோழர்கள் குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் இருக்கிறார்கள்
அப்படிப்பட்ட கொள்கைக் குடும் பங்களில் நடைபெறும் திருமணங்கள் ஜாதி மறுப்புத் திருமணம், மத மறுப்பு சடங்கு மறுப்பு, தாலி மறுப்பு திருமணம் என சுயமரியாதை திருமணங்கள் ஒவ் வொரு நாளும் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.
நமது கொள்கை வழி குடும்பங்களில் உள்ள இளைஞர்கள் எங்கேயும் எந்த சூழ்நிலையிலும் தமது லட்சியத்தை நிறைவேற்ற சிந்திப்பவர்கள். அதற்கா கவே உழைக்கும் எண்ணமும் உறுதியும் கொண்டவர்களாக நமது இயக்கத் தோழர்கள் இருக்கின்றனர்.
தந்தை பெரியாரியல் கொள்கையை தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் கடைப்பிடிக்கும் இயக்க தோழர்கள் தம் குடும்பத்தினரை இயக்க கூட்டங்கள் மாநாடுகள் பயிற்சி வகுப்பு என தொடர்ந்து அழைத்து சென்று பங்கேற்க வைப்பார்கள்
ஒவ்வொரு நாளும் தமது குடும்பங்க ளிலும் பகுத்தறிவு கொள்கையை பேசு வதால் அந்த குடும்பம் கொள்கை குடும் பங்களாக உருவாகி பெருகி வளர்ந்து வருகிறது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அப்படிப்பட்ட குடும்பத்தில் வள ரும் குழந்தைகளும் பெரியாரியல் கொள்கை வாரிசுகளாக உருவாகி சுய மரியாதை வீரர்களாக கொள்கை மற வர்களாக நமது திராவிடர் கழகத்தில் ஏராளமானோர் இருக்கின்றனர்
கோவை கழக மாவட்டத்தில் அப் படிப்பட்ட குடும்பங்கள் உருவாக பெரிதும் உறுதுணையாக இருந்த களப் பணி செய்து பல குடும்ப விழாக்களை ஒருங்கிணைத்து நடத்தியவர் சுயமரி யாதைச் சுடரொளி தோழர் சிற்றரசு ஆவார்.
சிற்றரசுவின் வாழ்விணையர் ராஜேஸ் வரி, கோவை சுயமரியாதைத் திருமணம் நிலைய அமைப்பாளராக பல ஆண்டு கள் பணியாற்றி பல சுயமரியாதைத் திருமணங்களை ஒருங்கிணைத்து நடத்தி கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அன்பை பெற்ற கொள்கை குடும்பத் தினர் ஆவார்.
பெரியாரியல் வழியில் பயணம் செய் யும் கொள்கை வாதிகள் தம் குழந்தை களையும் கொள்கை வாரிசுகளாக உரு வாக்கி அவர்களை தொடர்ந்து பெரி யார் கொள்கை வழியில் முன் நிறுத்தி நமது குடும்ப உறவுகளையும் சுயமரி யாதை குடும்பமாக அரவணைத்து ஊக்கப்படுத்தும் பணிகளை தொடர்ந்து செய்தால் கொள்கை குடும்பங்கள் மேலும் வளரும் பெருகும் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும். அப்படிப்பட்ட குடும்பம் தான் ச.சிற்ற ரசு அவர்களின் கொள்கைக் குடும்பம். அனைவருக்கும் எடுத்துக்காட்டான குடும்பம் ஆகும்.
மணவிழா
கோவை சிற்றரசு _- ராஜேஸ்வரி ஆகியோரின் மகன் மாவட்ட இளைஞ ரணி தலைவர் இராசி.பிரபாகரன், மகுடேஸ்வரன் _- ஆதீசுவரி ஆகியோரின் மகள் ஆ.ம.லாவண்யா வாழ்க்கை இணையேற்பு விழா கோவை ஒத்தகால் மண்டபம் அருகே ஈஸ்வரன் கோவில் மண்டபத்தில் 26.5.2024 அன்று நடை பெற்றது.
திருமண மேடையில் மறைந்த சிற்ற ரசு அவர்களின் நிழற்படம் அலங்கரிக் கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ச்சி தொடங்கியது.
விழாவிற்கு தலைமைக் கழக அமைப் பாளர் ஈரோடு த.சண்முகம் தலைமை வகித்தார்.
மணமக்கள் இராசி.பிரபாகரன் – ஆ.ம.லாவண்யா ஆகியோர் உறுதி மொழி ஏற்று மாலை அணிந்து கொண்டனர்
விழாவிற்கு கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர், திமுக குறிச்சி பிரபாகரன் மற்றும் சுயமரியாதைத் திருமண நிலைய அமைப்பாளர் வ.ராஜேஸ்வரி சிற்றரசு, மாவட்ட மகளிரணி தலைவர் ப.கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், கோபி, பொள்ளாச்சி, தாராபுரம் என்று பல மாவட்டங்களில் இருந்து கழகத் தோழர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.
மேலும் கோவை மாவட்ட செயலாளர் ஆ.பிரபாகரன், மாவட்ட துணைத் தலைவர் மு.தமிழ்ச்செல்வம், மாநகர தலைவர் தி.க. செந்தில்நாதன், மாவட்ட துணை செயலாளர் தி.க.காளி முத்து, மாநில மாணவர் கழக துணை செயலாளர் மு.ராகுலன், தொழிலாள ரணி மாவட்ட செயலாளர் வெங்கடா சலம், மாவட்ட மகளிரணி தலைவர் செ.முத்துமணி, மாவட்ட மகளிரணி தேவிகா, புனிதா, ப.க மாவட்ட தலைவர் சின்னசாமி, கணபதி பகுதி செயலாளர் ச.திராவிடமணி, கணபதி பகுதி தலை வர் கவி கிருஷ்ணன், மாநகர அமைப் பாளர் யாழ். வெங்கடேஷ், பீளமேடு பகுதி தலைவர் ஏ.முருகானந்தம், செயலாளர் எம்.ரமேஸ், சுந்தராபுரம் பகுதி தலைவர் தெ.குமரேசன், செயலா ளர் பா.ஜெயக்குமார், வடவள்ளி பகுதி தலைவர் ஆட்டோ சக்தி, செயலாளர் புலியகுளம் பகுதி தலைவர் இல.கிருஷ்ண மூர்த்தி, செயலாளர் கே.கோவிந்த், தி.ச.யாழினி, தி.ச..கார்முகில், த.க.யாழினி, தமிழ்முரசு, கவிதா, ராஜேஸ்வரி, ஆனந்த ராஜ், நா.குரு, வெற்றி செல்வன், முத்து மாலையப்பான், எட்டிமடை மருத முத்து, ஆனந்த், முத்து செல்வம், அ.மு.ராஜா உள்ளிட்ட திராவிடர் கழக தோழர்கள் மற்றும் தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகளின் தோழர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.