பெரியார் அய்.ஏ.எஸ். அகாடமி டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மாதிரி வினா விடை – 12

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

1. அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்   வற்றல் மரந் தளிர்த் தற்று  இதில் அன்பகத்து இல்லா என்பதை எவ்வாறு  பிரிக்கலாம்.
A) அன்பு + பகத்து + இல்லா
B) அன்பு + அகத்து + இலா
C) அன்பு + பகம் + இல்லா
D) அன்பு + அகத்து + இல்லா
2. பிரித்து எழுதுக:   “வாயினீர்”
A) வாய் + நீர்
B) வாய்ன் + நீர்
C) வாயின் + நீர்
D) வா + நீ
3.  தவறாக பிரிக்கப்பட்டுள்ள சொல்லைக் காண்க:
A பைங்கூழ் = பசுமை + கூழ்
B) சிற்றோடை= சிறுமை + ஓடை
C) சேதாம்பல் = சேதா + ஆம்பல்
D) மரவடி = மரம் + அடி
4. வீடுதோறிரந்தும் – பிரித்தெழுதுக
A) வீடுதோறும் + இரந்தும்
B) வீடு தோ+றும் + இரந்தும்
C) வீடுதோர் + இரந்தும்
D) வீடுதோறு + இரந்தும்
5. பிரித்தெழுக: வெவ்விருப்பாணி
A) வெம் + இரும்பு + ஆணி
B) வெம் + இருப்பு + அணி
C) வெம்மை + இரும்பு + அணி
D) வெம்மை + இருப்பு + அணி
6.தவறாக பிரிக்கப்பட்டுள்ள சொல்லை காண்க:
A) வெண்மதி = வெண்+மதி
B) கருமுகில் = கருமை + முகில்
C) காடிதனை = காடு + இதனை
D) வெந்துவர்ந்து = வெந்து + உவர்ந்து
7.செழுங்கனித் தீஞ்சுவை’ என்ற சொற்றொடர் சரியாக  பிரிக்கப்பட்டது எது?
A) செழுமை + கனி + தீஞ்சுவை
B) செழும் + கனி + தீஞ்சுவை
C) செழும் + கனி + தீம் + சுவை
D) செழுமை + கனி + தீம் + சுவை
8. பின்வருவன வற்றுள் “ஈறுபோதல்” மூன்று நின்ற   மெய்திரிதல் என்னும் விதிகளின்படி புணர்ந்தது காண்க
A) கருங்கல்
B) பெருங்குன்று
C) சிற்றூர்
D) செங்கதிரோன்
9.பொருத்துக
A) இயல்பு புணர்ச்சி     – 1 மொழிப்பொருள்
B) தோன்றல் விகாரம் – 2 கற்சிலை  
C கெடுதல் விகாரம்     – 3 மரவேற்
D) திரிதல் விகாரம்     – 4 வான் மழை
     A B C D
A) 3 1 4 2
B) 4 1 3 2
C) 4 1 2 3
D) 2 3 4 1
10. பின்வருவனவற்றுள் ‘தனிக்குறில்முன் ஒற்று உயிர்வதன்   இரட்டும’ என்னும் விதியின்படி புணராதது எது?
A) தன்னுயிர்
B) பெண்ணரசு
C) பைந்தமிழ்
D) என்னருமை
விடைகள்:
1.D, 2.C, 3.C, 4.A, 5.C, 6.A, 7.D, 8.B, 9.B, 10.C
– தொடரும்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *