கிருட்டினகிரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மய்ய மாவட்டச் செயலாளர் அ.மாதேசு மகள் பெங்களூரு சட்டக் கல்லூரி மாணவி பி.பி.ஏ,.எல்.எல்.பி., பயின்று வரும் மா.மனோகிரி 26/05/2024இல் தனது 20ஆவது ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணியிடம் ஓராண்டு விடுதலை சந்தாவை வழங்கினார். அவருக்கு தந்தை பெரியார் அறிவுரை 100 என்ற புத்தகத்தை வழங்கி பயனாடை அணிவித்து திராவிடர் கழகம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை மாவட்ட கழக துணைச்செயலாளர் சி.சீனிவாசன், ஒன்றியத்தலைவர் த.மாது, நகர செயலாளர் அ.கோ.இராசா, மாவட்ட ப.க.தலைவர் ச. கிருட்டினன், வி.சி.க.மாவட்டச் செயலாளர் அ.மாதேசு உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
கிருட்டினகிரி மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கிருட்டினகிரி சட்டமன்ற தொகுதி செயலாளர் தேவசமுத்திரம் த.தியாகு 26,05.2024இல் 47ஆவது பிறந்தநாள் விழா கிருட்டினகிரி டி.எஸ். ஆர். விடுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் கி. கோவேந்தன் தலைமையில் பிறந்தநாள் விழா கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ. திராவிடமணி தலைமையில் கழக நிர்வாகிகள் சால்வை அணிவித்து பெரியார் வாழ்க்கை வரலாறு புத்தகம் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். வி.சி.க. மாநில அமைப்புச்செயலாளர் கி. கோவேந்தன் முன்னிலையில் வி.சி.க.தொகுதி செயலாளர் த.தியாகு பிறந்தநாள் மகிழ்வாக ஓராண்டு விடுதலை சந்தாவையும், விசிக ஒன்றியச்செயலாளர் வெ.மாதையன் அரையாண்டு சந்தாவையும் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணியிடம் வழங்கினர். உடன் மாவட்டத் துணைச்செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன், ஒன்றியத்தலைவர் த.மாது, நகரச் செயலாளர் அ.கோ.இராசா, வி.சி.க. மாநில நிர்வாகி திராவிடராசா, ஒன்றியச் செயலாளர் கிழக்கு வெ.மாதையன் ஆகியோர் உடனிருந்தனர்.