ஊட்டி, மே.29 தமிழ்நாடு பல்கலைக்கழக பாடத்திட்டங்களில், இந் திய சுதந்திரப்போராட்ட தியாகிகள் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழ கங்களுக்கான துணை வேந்தர்கள் மாநாடு
நேற்றுடன் முடிந்தது. இதற்கு தலைமை தாங்கி ஆளுநர் ஆர்.என்.ரவிபேசும் போது கூறியதாவது:-
இந்தியாவை பொறுத்த வரை கல்வியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. உயர்கல்வியில் உள்ள தடைகளை தகர்த்து அடுத்தகட்டத்திற்கு செல்வதற்கு இந்த மாநாடு உதவும். இந்த மாநாடு மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற் றும் தனியார் பல்கலைக்கழ கங்கள் ஒருங்கிணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்படமுடி யும்.
மாணவர்கள் மத்தியில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, எதைப் படிக்கவேண்டும்என் பது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. எனவே கல்வியாளர்கள் மாணவர்களை வழிநடத்த வேண்டும். பேராசிரியர்கள் மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பெரும்பாலான தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களில் 50 சதவீத பேராசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ள நிலையில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு குறைந்த ஊதியம் கொடுத்து பயன்படுத்தி வருவதால் அவர்களிடம் இருந்து சிறந்த வழி காட்டுதல் மற்றும் ஊக்குவித்தலை எதிர்பார்க்க முடியாது. அரசுத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கிராமப்புறங்களுக்கு கல்லூரி மாணவர்கள் அனுப்பப்படுகின்றனர். இதுதான் கல்லூரி மாண வர்கள் செய்யவேண்டிய வேலையா?
உயர்கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து பள்ளிக்கு தேவையான மேஜை, தண்ணீர் தொட்டி உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் வாங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஒரு ஆண்டுக்கு 1,500 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றாலும், அதில் 5 சதவீதம் மாணவர்களே திறன் மிக்கவர்களாக உள்ளனர். நெட் தேர்வு குறித்து அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை.
சுதந்திர போராட்ட வரலாறு மறைப்பு
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களில் வரலாறு மற்றும் அரசியல் பாடப்பிரிவுகளின் பாடத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அதிர்ச்சியும், அவநம்பிக்கையும் அடைந்தேன். வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட ஒரு சில தியாகிகளின் வரலாறு மட்டுமே உள்ளது. மற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்கள் பற்றிய வரலாறும் இல்லை. ஆனால், திராவிட தலைவர்கள் மற்றும் திராவிட இயக்கங்கள் குறித்த வரலாறு உள்ளது. திராவிட வரலாறு. வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், ஆனால், அதுவே முழுவரலாறு என்று அர்த்தம் இல்லை. வரலாற்றை மறைப்பது, வரலாற்றை அவமதிப்பதாகும். ஜாலியன் வாலாபாக் படுகொலை போல தேவகோட்டையில் ஆங்கிலேயர்களால் 75 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு வரலாற்றில் இடம்பெறவில்லை.
-இவ்வாறு அவர் கூறினார்.