கலந்தாய்வு
தமிழ்நாடு அரசின் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது.
அபராதம்
தமிழ்நாடு முழுவதும் விதிகளை மீறிய 1,054 வாகனங்களிடம் இருந்து ரூ.1.09 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு
ஆணையர் சண்முகசுந்தரம் தகவல்.
மறு கூட்டலுக்கு…
பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் கேட்டு விண்ணப்பித்தவர்கள் இன்று மதியம் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன், மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விரும்புவோர் 29ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவிப்பு.
தேவையாக
மருத்துவ வசதிகள் கார்ப்பரேட் மயமாகி விட்ட நிலையில் அரசு மருத்துவமனைகளுடன், அதிக கட்டணம் வசூலிக்காத தனியார் மருத்துவமனைகளின் தேவையும் அவசியமாக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பணியில்
வாக்கு எண்ணும் பணியில் 38 ஆயிரத்து 500 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.