பொம்மைக் குதிரைகள்மீது ஏறி…
* தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய கூடலழகர்.
>> தங்கத்தினால் ஆகட்டும், வைரத்தினால் ஆகட்டும், அந்தப் பொம்மைக் குதிரைகள்மீது ஏறி, அழகர் ஆற்றைக் கடக்க முடியுமா?
ஒன்றிய அரசின் திட்டத்தை….
* தவறான கல்விக் கொள்கையால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறி!
துணைவேந்தர் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.இரவி
>> ஒன்றிய அரசின் புதிய கல்வித் திட்டத்தைக் குறை சொல்லுகிறாரோ, ஆளுநர்!
அரசியல் சன்னியாசம்
* பிரதமர் மோடி 30 ஆம் தேதி கன்னியாகுமரி வருகை. மூன்று நாள் தியானம் செய்கிறார்.
>> அரசியல் சன்னியாசம் வாங்கப் போகிறாரோ!
புத்தி வருமா?
* திருப்பூர் அருகே ஹிந்துக்கள் விநாயகர் கோவில் கட்ட ஜமாத் இடத்தைக் கொடையாக வழங்கிய
முஸ்லிம்கள்.
>> ஹிந்துத்துவா வெறி, விஷம் கக்கும் சங் பரிவார்களுக்குப் புத்தி வருமா?
செய்தியும், சிந்தனையும்…!
Leave a Comment