ஆர்.எஸ்.எஸின் குருநாதர் குருஜி கோல்வால்கரால் எழுதப்பட்ட “நாம் அல்லது நம் சமுதாயத் தன்மையின் விளக்கம்”(We or Our Nationhood Defined)) என்ற நூலில் என்ன கூறப்பட்டுள்ளது?
“ஹிந்துஸ்தானத்தில் வாழும் ஹிந்துக்களல்லாதார் ஹிந்துப் பண்பாடு, மொழி ஆகியவற்றை மேற்கொண்டு ஹிந்து சமயத்தை உயர்ந்த மதிப்பில் வைத்துப் போற்றி, ஹிந்து இனம், அதன் பண்பாடு, மொழி ஆகிய இரண்டின் புகழைத் தவிர வேறு எதையும் அவர்கள் வரவேற்கக்கூடாது. அதாவது அவர்கள் இந்த நாடு, அதனுடைய பழைமையான பாரம்பரியம் ஆகிய வற்றைக் காண சகியாத தன்மையினையும், நன்றி கெட்ட தன்மையினையும் முற்றிலும் நீக்கிவிட்டு, உறுதி யான எண்ணத்துடன், அன்பையும், பக்தியையும் அவைகளுக்குப் பதிலாகக் கொள்ளுதல் வேண்டும். ஒரே வார்த்தையில் கூறவேண்டுமானால், அவர்கள் அந்நியராக இருப்பதை விட்டொழிக்க வேண்டும். அவ்விதம் இருக்க அவர்கள் விரும்பவில்லை என்றால், அவர்கள் ஹிந்து சமுதாயத்திற்கு முற்றிலும் கீழ்ப்பட்ட மக்களாக, சலுகைகள் எதுவும் பெறத் தகுதியற்றவர்களாக, கண்ணியமாக நடத்தப்படுவத னையோ அல்லது பிரஜா உரிமையினைக்கூட அடைய அருகதையற்றவர்களாக, சுருங்கக் கூறு மிடத்து, எதனையும் கோர முடியாத மக்களாக வாழ்தல் வேண்டும். இவ்வழியினைத் தவிர அவர்கள் பின்பற்றுவதற்கு வேறு வழியே கிடையாது.”
( “We or Our Nationhood Defined” -நூல்: பக்கம் 65)
குடியுரிமை இன்றியும் ஹிந்துக்கள் அல்லாதார் இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். குருநாதர் எம்.எஸ்.கோல்வால்கர் கூறியிருப்பதுதான்
தினமணியின் பார்வையில் சமூக நீதியா?