ஓர் அன்பு வேண்டுகோள்!
“நானே எழுதி, நானே அச்சுக்கோர்த்து, நானே அச்சடித்து நானே மடித்து வைக்கும் நிலை ஏற்பட்டாலும் எனது “குடிஅரசு”இதழை நிறுத்த மாட்டேன்” என்று சொன்னவர் “உலக நல மருத்துவர் “தந்தை பெரியார்.
அப்படி வார இதழாக வந்த “குடிஅரசு” இதழ் இன்று “விடுதலை” நாளிதழாக அதுவும் (பகுத்தறிவு நாளேடு)90 ஆண்டுகளாக தொடர்ந்து வெளி வரும் சிறப்பு வேறு எந்த நாளிதழுக்கும் கிடையாது.
62 ஆண்டுகள் தொடர்ந்து “விடுதலை” நாளிதழுக்கு ஆசிரியராக தமிழர் தலைவர் கி.வீரமணி இருப்பது தற்போது உலக சாதனை பட்டியலில் இடம் பெறப் போகிறது.
இப்படிப்பட்ட சூழ் நிலையில் “விடுதலை” நாளிதழுக்கு தமிழ் நாடு முழுவதிலும் இருந்து சந்தாதாரர்களைச் சேர்த்துத் தர முடிவு செய்துள்ளோம்.
ஆண்டு சந்தா ரூ.2000 தந்து எங்களுக்கு ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பொருளாதார அடிப்படையில் தர இயலவில்லை என்றாலும் நட்பு தொடரட்டும்
நன்றி வணக்கம்.
கருப்பு சட்டை அறிமுகம் தவிர வேறு எந்த அறிமுகமும் இல்லாத நிலையில் இப்படிப் பதிவு போட்டு விட்டுத்தான் சந்தித்தேன்
ஆண்டு சந்தா 9 மற்றும் அரையாண்டு சந்தா 1 (மொத்த தொகை 19000/-) தந்தது மிகவும் மகிழ்ச்சிக் குரியது.
சந்தா தந்த நல் உள்ளங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி! நன்றி!! நன்றி!!!
– ஓமலூர் பெ.சவுந்தரராசன்.
பொதுக்குழு உறுப்பினர்