விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் வழங்கும் விழா
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது
திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழிக்கு ‘பெரியார் ஒளி’ விருது வழங்கல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் நேற்று (25.5.2024) நடைபெற்றது. இதில் திரைக் கலைஞர் பிரகாஷ்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மேனாள் மாநிலத் தலைவர் எஸ்.என்.சிக்கந்தர், கல்வெட்டியல் அறிஞர் எ.சுப்பராயலு ஆகியோருக்கு விசிக தலைவர்
தொல். திருமாவளவன் விருதுகளை வழங்கினார். உடன்: விசிக பொதுச் செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், துரை.ரவிக்குமார், சட்டப் பேரவை உறுப்பினர்கள் எஸ்.எஸ். பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர்.
சென்னை, மே 26 விடுதலைச் சிறுத்தைகள் விருதுகள் வழங்கும் விழா நேற்று (25.5.2024) மாலை சென்னை காமராசர் அரங்கில் நடை பெற்றது. இதில் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழிக்கு பெரியார் ஒளி விருதை எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் வழங்கி சிறப்பித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா – 2024 சென்னை தேனாம்பேட்டை யில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று (25.5.2024) நடைபெற்றது. விழாவுக்கு விசிக தலைவர் மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் வரவேற்புரையாற்றினார். பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி. வாழ்த்துரை வழங்கினார். முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமாவளவன் விருதாளர்களின் தகுதியுரையை வாசித்தார்.
7 பேருக்கு விருது: இதையடுத்து, நடப்பாண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது – நடிகர் பிரகாஷ்ராஜ், ‘மார்க்ஸ் மாமணி விருது – இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்துக்கு ‘காமராசர் கதிர்’, திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் அருள் மொழிக்கு ‘பெரியார் ஒளி, சமூக செயற்பாட்டாளர் பேராசிரியர் ராஜ் கவுதமனுக்கு ‘அயோத்திதாசர் ஆதவன்’, வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மேனாள் மாநிலத் தலைவர் எஸ்.என்.சிக்கந்தருக்கு ‘காயிதேமில்லத் பிறை’, கல்வெட்டியலறிஞர் எ.சுப்பராயலுவுக்கு ‘செம்மொழி ஞாயிறு’ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை விசிக தலைவர் தொல். திருமாவளவன் வழங்கினார். விருதாளர் ராஜ்கவுதமன் உடல்நிலை காரணமாக வர இயலாத தால் அவரது உறவினர் ஜெகநாதன் விருதை பெற்றுக் கொண்டார். இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்தின் மகள் பேராயர் கதிரொளி மாணிக்கம், சமூக செயற்பாட்டாளர் பேராசிரியர் ராஜ்கவுதமனின் உறவினர் ஜெகநாதன் ஆகியோர் விழாவில் பேசினர். இறுதியாக விசிக தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் பேருரை ஆற்றினார். விழாவில் விசிக துணை பொதுச்செய லாளர் கள் வன்னியரசு, ஆதவ் அர்ஜுன், தலைமை நிலையச் செயலாளர்கள் பால சிங்கம், தகடூர் தமிழ்ச் செல்வன், மாநில அமைப்புச் செயலாளர் லயன் ஆர்.பன்னீர்தாஸ், 190-ஆவது வட்டச் செய லாளர் சிட்டு (எ) ஆமோஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.