ஆத்தூர், மே 26- ஆத்தூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சி யாளர் அம்பேத்கர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு அரங்கக் கூட்டம் 25.5.2024 சனிக் கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் வடசென்னிமலை அறிவு நெறி பயிற்சி மய்யத்தில் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் கழக மாவட்டச்செயலாளர் அ.அறிவுச் செல்வன் தலைமை தாங்கினார்.
பகுத்தறிவாளர் கழக மாவட்ட இணைச் செயலாளர் கா.பெரியசாமி வரவேற்புரை ஆற்றினார்.
திராவிடர் கழக மாவட்ட செயலா ளர் நீ.சேகர், கழக மாவட்ட காப்பாளர் இரா.விடுதலைச் சந்திரன், நரசிங்கபுரம் நகரத் தலைவர் சைக்கிள்கடை மணி, நரசிங்கபுரம் நகர செயலாளர் நல்ல சிவம், நகர அமைப்பாளர் மருத.பழனி வேல், பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் பெ.முரளி ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் அணி மாநிலச் செயலாளர் வா.தமிழ் பிரபாகரன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா.மாயக்கண்ணன் தொடக்க உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பா ளர்களாக ஆத்தூர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் முரு கேசன், சமூக நீதி சம்பத், காளிதாஸ், குரால் மைக்கேல், ஆ.அஜீத், முனைவர் கு.பிரகாஷ், சீனிவாசன், ஆ.அருள் பிர காஷ், ஊனத்தூர் துரை, க.மணிகண் டன், பெ.கோபிநாத், பெ.வினோத் இரா.ஹரி, இரா.அருள், இரா.ராகுல், பகுத்தறிவாளர் கழக விஜய் ஆனந்த், திராவிடர் கழக மாணவர் அணி செ. விக்னேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாக பெரம்பலூர் வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறை சிறப்பு விரிவுரையாளர் முனைவர் மு.முத்து மாறன் அண்ணல் அம்பேத்கர் எழுதிய சாதியை அழித்தொழிக்கும் வழி என்ற நூலை மதிப்புரை செய்தார்.
சிறப்புரையாக ஆத்தூர் பகுத்தறி வாளர் கழக மாவட்ட தலைவர் பேச் சாளர் வ.முருகானந்தம், கழக மேனாள் செயலவை தலைவர் சு அறிவுக்கரசு அவர்கள் எழுதிய இவர்தாம் புரட்சிக் கவிஞர் பார் என்ற நூலை மதிப்புரை செய்தார்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர் களும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களும் இந்த சமூகத்திற்கு ஆற்றிய புரட்சிகள் பற்றியும் இரண்டு நூல்க ளின் சாராம்சம் குறையாமல் சுவையான சொற்பொழிவுகளாக இருந்தது.
நிகழ்ச்சியில் ஆசிரியர்களும், பேராசிரியர்களும், கல்லூரி மாண வர்களும் 40க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் களுக்கு தேநீர் சிற்றுண்டி புத்தகம் ஆகி யவை பேராசிரியர் முனைவர் முருகேச னால் வழங்கப்பட் டது.
நிகழ்ச்சியின் நிறைவாக பகுத்தறிவாளர் கழக மாவட்ட பொறுப்பாளர் பெ.முரளி நன்றியுரை ஆற்றிட பிறந்த நாள் விழா இனிதே நிறைவுற்றது.
ஆத்தூரில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா
Leave a Comment