டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
➡️ டில்லியில் ஏழு மக்களவைத் தொகுதிக்கும் இன்று நடைபெறும் தேர்தலில் இந்தியா கூட்டணி – பாஜக நேரடி மோதல்.
➡️குரங்கு கையில் பூமாலை போன்று ஆளுநரின் செய்கைகள் உள்ளன, அமைச்சர் ரகுபதி கண்டனம்.
➡️ முல்லைப் பெரியாறு அணைக்கட்டை புதிதாக கட்ட வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை நிராகரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
➡️அதானி நிலக்கரி ஊழல் குறித்து விரைவாக விசாரணை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 21 பன்னாட்டு அமைப்புகள் கடிதம்
➡️ ஆங்கிலேயர் இந்தியாவை சுரண்டியது போல், கடந்த பத்தாண்டு பாஜக ஆட்சியில் மோடி கொள்ளை அடித்துள்ளார், மல்லிகார்ஜூனா கார்கே குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
➡️பிரதமர் பதவி என்பது ஒரு நிறுவனத்தின் தலைவர் பதவி போன்றது. முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும் என பிரதமர் மோடியின் பேச்சுகள் குறித்து சரத் பவார் சாடல்.
➡️ கடவுளால் அனுப்பப்பட்டவர்தான், நூறு நாள் வேலைக்கான நிதியை நிறுத்துகிறாரா அல்லது கிராமப்புற வீடுகள் கட்டப்படுவதை தடுக்கிறாரா? மக்களின் வங்கிக் கணக்கில் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்ற வாக்குறுதியை கடவுள் திரும்பப் பெறுகிறாரா? என மம்தா, மோடியின் கடவுள் அவதார பேச்சுக்கு காட்டம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
➡️அக்னிபாத் குறித்து பேசக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு பின்னால் பிரதமர்’: காங்கிரஸ் கண்டனம்.
தி டெலிகிராப்:
➡️ ஓபிசி சான்றிதழ் தொடர்பான கொல்கத்தா உயர்நீதி மன்ற உத்தரவை எதிர்த்து அரசு உயர் நீதிமன்றத்தில் போராடும், மம்தா.
– குடந்தை கருணா