சென்னை, நவ. 20 – மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்க ஒன்றிய அரசு உறுதியான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத் தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
“ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீன்பிடி படகுகளில் நாகபட்டினம் கோடியக்கரை பகுதியில் இருந்து தங்கு கடல் மீன் பிடிப்புக்காக கடந்த 15.11.2023 ஆம் தேதி மீனவர் கள் கடலுக்குள் சென்றுள்ளனர்.
இதில் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்கள் கோடியக் கரைக்கும் – பருத்தித் துறைக்கும் இடையில் மீன்பிடித்துக் கொண் டிருந்த போது, இலங்கை கடற் படையினர் அவர்கள் 22 பேர் களையும் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
கடலில் மீன் பிடிப்பது மட் டுமே வாழ்வாதாரம் என்ற வாழ்க்கை நிலையில் உள்ள கடலோர மீனவக் கிராமங்கள் அனைத்தும் கடுமை யான வேதனையிலும், பாதுகாப் பற்ற பரிதவிப்பிலும் வாழ்ந்து வருகின்றன.
தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையில் இலங்கை கடற்படையின் அத்துமீறி மறுப் பதை இந்திய ஒன்றிய அரசு தலை யிட்டு தடுக்க வேண்டும், மீன்பிடி தொழில் முழுமையாக பாதுகாப் புடன் நடைபெறும் சூழல் உருவாக் கப்பட வேண்டும் என மீனவர் களும், அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து பா.ஜ.க. அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசும், முதலமைச் சரும், நாட்டின் பிரதமர், ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச் சர் உள்ளிட்ட அனைவருக்கும் மீனவர் பாதுகாப்புக்கு உரிய ஏற் பாடு செய்ய தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.
ஆனாலும் இலங்கை அரசுடன் இந்திய அரசு மீனவர்களின் வாழ் வாதாரம் குறித்து திட்டவட்ட மான பேச்சு வார்த்தையை தொடங்கியதாக தெரியவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களும் இந்திய நாட்டின் குடிமக்கள் தான் என் பதை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுவித்து, அவர் களது உடைமைகளுடன் நாடு திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும். நீண்ட கடற்கரையை பெற்றுள்ள தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான மீனவக் கிராமங்களில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான மீனவர் களின் மீன்பிடி உரிமையை பாது காக்க ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நாட்டின் பிரதமர் மோடியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.” இவ்வாறு இரா.முத் தரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.