சென்னை, மே 25- தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 68,927 பேருக்கு 8 கிராம் தங்க நாணயங்களுடன் நிதி உதவி உட்பட 1.26 லட்சம் மகளிருக்கு ரூ.1,047 கோடியில் திருமண நிதி யுதவி வழங்கி சாதனை படைக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த 382 குழந் தைகள் பெயரில் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.19.10 கோடி வங்கிகளில் வைப்பீடு செய்யப்பட்டது. தாய் அல்லது தந்தையை இழந்த 18 வயதுக்குட்பட்ட 13,682 குழந்தை களின் பெற்றோருக்கு தலா ரூ.3 லட்சம் வீதமும், இலங்கைத் தமிழ் அகதிகளின் 9 குழந்தைகள் உட்பட ரூ.410.73 கோடி நிவாரணமும் முதலமைச்சர் வழங்கினார்.
பெற்றோரை இழந்து உறவினர், பாதுகாவலர் அரவணைப்பில் வளரும் 365 குழந்தைகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் பரா மரிப்பு தொகையாக ரூ.2.35 கோடி வழங்கப்படுகிறது. கட்டணமில்லா பேருந்துபயணத் திட்டம் மூலம் பயணிகள் மாதம் ரூ.888 வரை சேமிக்கின்னர்.
மேலும், கடந்த 2022 ஆகஸ்ட் டில் செயல்படுத்தப்பட்ட புது மைப்பெண் திட்டத்தில், இதுவரை 2.73 லட்சம் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வீதம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சத்துணவு மய்யங்களில் பணி யாற்றும் சமையலர், சமையல் உதவியாளர்களுக்கான ஓய்வு வயது 60ஆக உயர்த்தப்பட்டுள் ளது. சத்துணவு மய்யங்களில் வைப்பறையுடன் கூடிய 1,285 சமையலறைகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளன.
சமூக நலத்துறை மூலம் 19 மாவட்டங்களில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் செயல்பட்டு வரு கின்றன. முதலமைச்சர் உத்தரவுப் படி, திருச்சி, கூடுவாஞ்சேரி, தாம்பரத்தில் ரூ.31.07 கோடியில் 688 மகளிர் பயன்பெறும் வகையில் விடுதிகள் கட்டப்பட்டு, இதில், 259 பேர் பயன்பெறுகின்றனர்.
முதலமைச்சரின் பெண் குழந் தைகள் பாதுகாப்பு திட்டத்தில், 1.43 லட்சம் குழந்தைகளுக்கு ரூ.341.30 கோடி முதிர்வு தொகை 2021-2022இ-ல் வழங்கப்பட்டுள் ளது. 2023 டிசம்பர் வரை 7,343 குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப் பட்டுள்ளன.
திருமண நிதியுதவி திட்டத்தில், 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 26,637 மகளிருக்கு ரூ.1,047 கோடி திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில், 68,927 மகளிருக்கு 8 கிராம் தங்க நாணயங்களுடன் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஆதரவற்ற திருநங்கை களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1,500ஆக உயர்த்தப்பட்டு, ரூ.236 கோடி நிதியில் 1,482 பேர் பயன்பெறு கின்றனர்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சத்து மாவு வழங்கப்படுகிறது. ரூ.18.68 கோடியில் சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.
மகளிர் நலனில் தனிக் கவனம் செலுத்தி பல திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால் மகளிர், குழந்தைகள், மாற்றுத் திறனா ளிகள் பாதுகாப்புடன் வாழ்கின்றனர்.