ஆதித்யா – எல் 1 வெற்றி திட்ட இயக்குநர் தமிழச்சி நிகர் ஷாஜி பெருமிதம்!

2 Min Read

சென்னை செப்.3 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் பெண்களின் பங்கு முன்னேற்றத்தை கண்டு வருகிறது. குறிப் பாக விண்வெளி ஆராய்ச் சியில் பெண்களின் உழைப்பு நாட்டின் மேம் பாட்டுக்கு மேலும் பலத்தை கொடுக்கிறது.சமீப காலமாக விண் வெளிக்கு ஏவப்பட்ட ராக்கெட் திட்டங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகளின் பங்கும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அரசு பள் ளியில் படித்து விண் வெளி ஆராய்ச்சியின் உச்சத்திற்கு சென்று பெருமைப்படுத்தி வரு கின்றனர் தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள்.

அதில் ஒருவர் தான் இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி. தமிழ்நாட் டின் செங்கோட்டையைச் சேர்ந்தவர் நிகர் ஷாஜி. 59 வயதான இவர் அரசு பள்ளியில் படிப்பை முடித்தார். 10ஆம் வகுப் பில் மாவட்டத்தில் முதல் இடம். 12ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் இடம்.பின்னர், திருநெல்வேலியில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் பட்டப் படிப்பை முடித்த ஷாஜி ராஞ்சியில் உள்ள பிர்லா தொழில்நுட்பக் கல்லூரி யில் எம்.டெக். பட்டம் பெற்றார்.விண்வெளி ஆராய்ச்சியின்மீது ஆர் வத்தில் இருந்த ஷாஜி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு, பல் வேறு விண்கல திட்டங் களில் தனது பணியை முழு அர்ப்பணிப்போடு செய்து வந்தார். இந்நிலை யில், 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்யா எல்1 விண்கல திட்டத்திற்கு தலைமைப் பொறுப்பு ஏற்றார்.

ஆதித்யா எல் 1 விண் கலத்தின் திட்ட இயக் குநராக சூரியனின் ஆய் வுக்காக வெற்றிகரமாக விண்ணில் ஏவிய நிகர் ஷாஜி   மேடையேறி “கனவு நிறைவேறிவிட்ட தாக” பெருமையுடன் கூறினார்.

ஆதித்யா எல்1 வெற்றி குறித்து நிகர் ஷாஜி கூறுகையில், ” நான் எட்டு ஆண்டுகளாக இந்த சிக்கலான திட்டத்திற்கு தலைமை தாங்குகிறேன். இது ஒரு சவாலான திட்டம். ஒளிவட்டப் பாதையில் விண்கலத்தை நிலைநிறுத்துவது பெரும் சவாலாக இருந் தது. இன்று கனவு நிறை வேறிவிட்டது” என்றார்.

நிகர் ஷாஜியின் கணவர் மெக்கானிக்கல் இன்ஜினியர், துபாயில் பணிபுரிகிறார். மகன் பிஎச்.டி படித்து நெதர் லாந்திலும், மகள்  மருத் துவராகவும் முதுகலை படித்து வருகிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *