இதுதான் இந்து மதம் !
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் விழாவில் வடகலை தென்கலை பிரிவினர் இடையே அடிதடி – காவல்துறை விசாரணை.
வரதராஜ பெருமாள் எங்கே போனார்?
இதுதான் பார்ப்பனியம் !
‘இந்து தமிழ் திசை’ நாளிதழில், திருவள்ளுவர் இந்துதான் என்று சொல்லுகிறார் கவிஞர் கண்ண தாசன் என்ற கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
பார்ப்பனர்கள் எந்த முகாமிலிருந்தாலும், அவர் களுடைய எண்ணம் எல்லாம் தமிழர்களுக்கு எதி ரானதாகவும், திருவள்ளுவரை கொச்சைப்படுத்துவ தாகவுமே இருக்கிறது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.
இதே கண்ணதாசன்பற்றி எழுதியதை எடுத்துக் காட்டினால், நாக்கைப் பிடுங்கிக் கொள்ள நேரிடுமே!
‘‘கடவுள் வாழ்த்து” என்ற பகுதி திருவள் ளுவர் எழுதியது கிடையாது என்று வ.உ.சி. குறிப் பிட்டிருப்ப தைப்பற்றி இவர்கள் ஏன் எழுது வதில்லை?