அறிவுறுத்தல்…
கைவினைப் பொருள்கள் பயன்படுத்துவதை ஊக்கு விக்கும் வகையில் கல்வி நிறுவனங்களில் பிரச்சாரம் மேற் கொள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
பருவமழை
வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைவதால், தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 23ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
சரிபார்க்க…
தமிழ்நாட்டில் 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் வரும் 30ஆம் தேதிக்குள் சரிபார்க்க தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
பயிற்சி
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மய்யத்தில் வம் 23ஆம் தேதி வேளாண்மை பயிற்சியும், 24ஆம் தேதி சிறு தானிய தின்பண்டங்கள் தயாரிக்கும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
அதிகரிப்பு
தமிழ்நாட்டில் இன்புளூயன்சா வைரஸ் பரவல் காரணமாக சளி, இருமல், காய்ச்சல் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.