வாசிங்டன், செப்.3 காலை உணவுத் திட்டம் குறித்த தினமலரின் விமர்சனத்துக்கு வட அமெரிக் கத் தமிழ்ச் சங்கப் பேரவை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முதல மைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விமர்சித்து தினமலர் நாளிதழில் அநாகரீகமான செய்தி வெளிவந்திருந்தது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கடுமையாக விமர்சித்திருந்தனர். மேலும், பொதுமக்களும் கொதித்தெ ழுந்து தினமலரின் விளம்பரங் களை அழித்தனர்.
இந்த நிலையில், தினமலரின் இந்தச் செயலை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் கண் டித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.
தினமலர் நாளிதழுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் கண்டன அறிக்கை:
உலகெங்கும் வாழும் தமிழர் களுக்கு தமிழ்நாட்டில் நடக்கும் சமுதாய நிகழ்வுகளை இணை யம் மூலம் தொடர்ந்து நோக் குதல் தமிழர்களுக்கு அன்றாட நட வடிக்கை என்றால் அது மிகை அல்ல. அவ்வாறு ஆகஸ்ட் 31 அன்று தமிழ்நாட்டில் ஒருத லைப் பட்டச்சமாக செயல்படும் ஒரு நாளிதழ் செய்த செயல் மிகவும் அருவருக்க மற்றும் கண்டிக்கத் தக்க செயலாயிற்று.
சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பாராட்டத்தக்கத் திட்டமான காலை உணவுத் திட்டத்தால், மாணவர்கள் பசி இன்றி ஊட்டச்சத்துள்ள உணவை கிடைக்க செய்து, குறிப்பாக மாணவர்கள் தொடர்ந்து பள் ளிக்கு வந்து உணவு உண்டுவிட்டு, கல்வி கற்பது என்பது தமிழ் சமுதாயத்திற்கே பெருமை சேர்க்கும் விதமான இந்த திட் டத்தை உலகில் உள்ள தமிழர் கள் அனைவரும் கட்சிக்கு அப் பாற்பட்டு மனதாரப் பாராட்டி வருகிறார்கள்.
அப்படிப்பட்ட திட்டத்தை தமிழ்நாட்டிற்கு அருகே உள்ள மாநிலம் தெலங்கானா அரசு அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வந்து, அந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களை பார்வையிட்டு அதனை தங்கள் மாநிலத்தில் எப்படி செயல் படுத்துவது என் பதை கேட்டு அறிந்து சென்று இருப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை.
இப்படி உலகெங்கும் இருக் கும் தமிழர்கள் மனதார பாராட் டிக்கொண்டு இருக்கும் வேளை யில், தமிழ்நாட்டில் உள்ள தின மலர் பத்திரிகை, ஊடக தர் மத்தை மறந்து, “காலை உணவு திட்டத்தை” கொச்சைப்படுத் தும் விதமாக தலைப்பு செய்தி இட்டு இருப்பது மிக மிக கண்டிக்கத்தக்கது.
குறிப்பாக ஏழை எளிய மற்றும் கிராமப்புற மாணவர்கள், அவர்களின் குடும்பங்களை இழிவுபடுத்தும் விதமாக செயல் பட்டு இருப்பது மிக தவறான செயல். இதற்கு “தினமலர் – சேலம்“ பதிப்பு ஆசிரியர் மன் னிப்பு கேட்க வேண்டும் என் பதை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசிடம் மன் னிப்பு என்பதை விட, தமிழ் நாட்டு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும், பெற்றோர் களிடம் தார்மீக அடிப்படையில் மன்னிப்பு கேட்க வேண்டும் – அதுவே அறம்!
தினமலரின் இந்த தரம் கெட்ட செயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு அமைச்சர்களும், உலகெங்கும் இருக்கும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத் தக்கது.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் “தினமலர்” நாளிதழுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறது.