மலேசிய நாட்டின் ஜொகூர் மாநிலத்தில் கோத்தா திங்கி மாவட்டத்தில் உள்ள 8 தமிழ் பள்ளிகளுக்கும் (சுங்கை பாப்பான் தோட்டம், ரேம் தோட்டம், பாசா தமிழ் பள்ளி, நம் ஹேங் தோட்டம், மெர்சிங், சிலாங்கூர் கிள்ளான் திபி சுங்கை ஆகிய பள்ளிகளைச் சார்ந்த சுமார் 300க்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரியாரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புரட்சிக் கவிஞரின் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. தோட்ட நிர்வாகிகள் மன்ற தலைவரும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் மலேசியா கிளைத் தலைவருமான மு.கோவிந்தசாமி ஏற்பாட்டில் தோழர்கள் தா.பரமசிவம், மதியழகன், பெரியார் பெருந்தொண்டர் கோ.ஆவுடையார் ஆகியோர் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மலேசியத் தமிழ் பள்ளிகளுக்கு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூல்கள் அன்பளிப்பு
Leave a Comment