டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* கூகுள் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டில் புதிய செல்போன் ஆலை: முதல் முறையாக அமைப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேர்தல் முடிவுக்கு பிறகு
சந்திக்க திட்டம்.
* புதிய அணை கட்டும் திட்டத்தை கைவிடுங்கள், கேரள முதலமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
*முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத் துறை உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அண்டை மாநிலங்களுக்கும் உணவுப் பொருட் களை வழங்கி தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜனநாயகத்தைக் காக்க, இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள், டில்லி வாக்காளர்களுக்கு சோனியா வேண்டுகோள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜகவுக்கு ஓட்டு கேட்க, ஆளுநர் ஆனந்த போஸ், பா.ஜ.கவின் தாமரை சின்னம் அணிந்துள்ளார்: தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் புகார்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பிரதமர் மோடி சொல்வதை சாமானியர்கள் கூறினால், அவரை நேரடியாக மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வீர்கள்: ராகுல் காந்தி பேச்சு.
* தெலங்கானாவில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்று ஓபிசி தலை வர்கள் வேண்டுகோள்.
தி இந்து:
* 2024 மக்களவை: உ.பி.யில் உள்ள பூர்வாஞ்சல் பகுதியில் இருந்து பாஜக துடைத்து எறியப்படும், அகிலேஷ் உறுதி
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணாவை பிரதமர் மோடி ஏன் ‘பாதுகாக்கிறார்? என்ன கட்டாயம் மோடிக்கு?’ என ராகுல் காந்தி கேள்வி
தி டெலிகிராப்:
* விவசாயிகள், ஏழைகளின் வலி பிரதமர் மோடிக்கு புரியவில்லை: அரியானாவில் பிரியங்கா காந்தி
– குடந்தை கருணா