3.9.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து ஆய்வு செய்ய அமித்ஷா உள்ளிட்ட 8 பேர் கொண்ட உயர்மட்ட குழு அறிவிப்பு. காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உறுப்பினராக சேர மறுப்பு.
👉 பெண்கள் இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு உள் ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்.கிருஷ்ணய்யா,எம்.பி. தலைமையிலான அமைப்பு செப்டம்பர் 19இல் டில்லியில் ஆர்ப்பாட்டம்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
👉2 ஆண்டுக்கு பின் நடந்த தேர்தலில் அமோக வெற்றி – சிங்கப்பூர் அதிபரானார் தமிழர் தர்மன் சண்முக ரத்தினம் – தலைவர்கள் வாழ்த்து.
👉 அரசு பள்ளியில் இருந்து இஸ்ரோவுக்கு – ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் தென்காசியை சேர்ந்த நிகர் ஷாஜிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
தி இந்து:
👉 2024 தேர்தலுக்கு உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, ஒருங்கிணைப்புக் குழுவில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி (ஊடகம்), தயாநிதி மாறன் (சமூக வலைத்தளம்), ஆ.ராசா (ஆராய்ச்சி), திருச்சி சிவா (பிரச்சாரம்) நியமிக்கப் பட்டுள்ளனர்.
தி டெலிகிராப்:
👉நாட்டில் உள்ள 2-3 பெரும் பணக்காரர்களின் நலனுக்காக பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு பாடுபடுகிறது. ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் ஏழைகளின் நலனுக்காக பாடுபடுகிறது என ராகுல் பேச்சு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
👉கடைகளுக்குப் பெயர் பலகைகளை தமிழில் வைக்கும் சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு.
ஹிந்துஸ்தான் டைம்ஸ்:
👉 ‘ரோகிணி கமிஷன்’ ஓபிசி ஒதுக்கீடு கொள்கையில் முக்கிய மாற்றங்களை பரிந்துரைக்க வாய்ப்பு.
– குடந்தை கருணா