கடவுள், கடவுள் என்று கூறுகிறாயே, உனக்கு எப்படியப்பா, அது இருப்பது தெரிந்தது? என்று கேட்டால் தனக்கு மற்றொருவர் கடவுள் இருப்பதாகக் கூறினார் என்று கூறுவாரே ஒழிய, கடவுள் நேரில் வந்து கூறியதாகவோ, தன் உள்ளம் கூறியதாகவோ கூறுவாரா? கூற முடியுமா? “இல்லை இல்லை என்னுடைய உள்ளம்தான் கூறுகிறது கடவுள் இருப்பதாக” என்று ஒருவர் கூறுவாரானால், அதென்ன அவருடைய உள்ளம் மட்டும் நெய்யில் பொரிக்கப்பட்டதா? நம்முடைய உள்ளம் என்ன கடலெண்ணெயில் பொரிக்கப்பட்டதா? நாம் சிந்திக்க வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1326)
Leave a Comment