ராணிப்பேட்டை, மே 23- ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஒன்றியம், காவேரிப்பாக்கம் ஒன்றியங்களில் உள்ள அனைத்து பஞ்சாயத்து தலைவர்களையும் சந்தித்து விடுதலை நாளிதழின் அவசியம், முக்கியத்துவத்தையும், தமிழர் தலைவர் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராக பணிசெய்து தந்தைபெரியாரின் கொள்கைகளை தமிழ்நாட்டின் உரிமைகளை தமிழனின் உரிமைகளையும் காத்து உலகம் முழுமைக்கும் விடுதலை நாளேடு செல்கிறது தமிழர்களின் மூச்சு காற்று விடுதலை என்பதை விளக்கி, கடந்த 17,18 -05-2024 வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் முதற்கட்டமாக தலைமைக்கழக அமைப்பாளர் பு.எல்லப்பன் ,மாவட்ட தலைவர் சு.லோகநாதன்மாவட்ட செயலாளர் செ.கோபி, காவேரிப்பாக்கம் பேரூராட்சி மேனாள் தலைவரும், நகர தி.மு.க. மேனாள் செயலாளருமான போ.பாண்டுரங்கன் ஆகியோர் மாவட்டம் முழுக்க விடுதலை சந்தா சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். சந்தித்த அனைவரும் நல்ல ஆதரவும், ஊக்கமும் வழங்கி பாராட்டினர். அடுத்து அரக்கோணம் ஒன்றியம், நெமிலி ஒன்றியம் விடுதலை சந்தா சேர்க்கும் பணி தொடங்க முடிவெடுக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘விடுதலை’ சந்தா சேர்க்கும் தீவிர பணியில் தோழர்கள்
Leave a Comment