2024-2025 ஆம் கல்வி ஆண்டில் சிபிஎஸ்இயில் தமிழ் கட்டாயப் பாடம் பள்ளிக்கல்வித்துறை தகவல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மே 23 சிபிஎஸ்இ உட்பட அனைத்துவித பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் வரும் கல்வியாண்டில் கட்டாயம் தமிழ் பாடத் தேர்வு எழுத வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித் துள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து விதமான பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் நடை முறையில் உள்ளது. அதன்படி,
2015_20-16ஆ-ம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடமானது. 2016-_2017ஆ-ம் கல்வி ஆண்டில் 2ஆ-ம் வகுப் புக்கும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமலானது. அதன்படி 2023_20-24-ஆம் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக நடை முறைக்கு வந்தது.

தொடர்ந்து வரும் 2024-_2025ஆ-ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடம் கட்டாயமாகிறது. இது மாநில பாடத்திட்ட பள்ளிகளுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் செயல் படும் சிபிஎஸ்இ, அய்சிஎஸ்இ உட்பட அனைத்து விதமான பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்த மாணவர்கள் பொதுத் தேர்விலும் தமிழை ஒரு தேர்வாக கட்டாயம் எழுத வேண்டும். இதற்கான தேர்வு முறை மற்றும் பாடத் திட்டம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற் கிடையே பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின் படி சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டும் சுமார் 6 ஆயிரம் பேர் வரை தமிழ் தாய் மொழி அல்லாத மாணவர்கள் இருப்ப தாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திலும் விவாதிக்கப்பட் டுள்ளது. மேலும், இதர கல்வி வாரி யங்களின் கீழ் இயங்கும் பள்ளிகள் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *