குவைத் – வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர் சங்கத் தலைவர் ந.தியாகராஜன் அறிக்கை!
குவைத், மே 23- உலகத் தமிழர்கள் அனைவருக்கும் அயலக தமிழர் நலவாரி யம் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என்று குவைத் வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர் சங்கத் தலைவர் சிதம்பரம் ந.தியாகராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை வருமாறு :- “தமிழன் பிறக்க ஓர் ஊர் பிழைக்க ஓர் ஊர்” எனும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கருத்துக்கு ஏற்ப, கல்வி, வணிகம், வேலை வாய்ப்பு என பல தரப்பட்ட காரணங்களுக்காக தமி ழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரு கின்றனர். அவர்களின் நீண்ட நாள் நெடுங் கனவாய் இருந்து வந்தது புலம்பெயர் தமிழர்களுக்கு என தனி நல அமைச்சகம், தனி நல வாரியம்.
பலதரப்பட்ட போராட்டங்கள் பல கோரிக்கைகள் என இருந்து வந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு அமைந்த முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அந்த கனவை நனவாக்கியது. மேலும் அதை உயிர்ப் பிக்கும் விதமாக நேற்றைய தினம் ஓர் இன்ப அதிர்ச்சியாய் புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் மூலம் அனைத்து அயலக தமிழர்களும் வாரியத்தின் உறுப் பினர் அட்டையை பெற்றுக் கொள்ளலாம் எனும் அறிவிப்பு எங்களின் காதுகளில் தேனாய் பாய்ந்தது..
புலம்பெயர் தமிழர்களின் மனம் இந்த அறிவிப்பினால் பூத்துக் குலுங்கும் நந்தவனம் ஆனது என்றால் அது மிகையாகாது. மேலும் அந்த உறுப்பினர் அட்டையைப் பயன்படுத்தி விபத்து காப்பீடு 5 லட்சம் மற்றும் 10 லட்சம் தீவிர மற்றும் தொடர் சிகிச்சை காப்பீடு ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான காப்பீடு வசதி வழங்கியுள்ளனர்.
மேலும், வெளிநாடுகளில் இறக்கும் வாரிய உறுப்பினர் அட்டை உள்ள தமிழர்களின் பிள்ளைகளின் கல்வி உதவித்தொகை பத்தாம் வகுப்பிற்கு ரூ. 3000 எனவும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு, தொழிற்கல்வி போன்றவைகளுக்கு ரூ.4000 எனவும், பொறியியல் பட்டையப் படிப்பு, மருத்துவப் பட்டயப் படிப்பு, ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு, உடற்கல்வி பட்டயப் படிப்பு ஆகிய படிப்புகளுக்கு ரூ.5000 எனவும்,
பொறியியல் பட்டப்படிப்பு, மருத்துவ பட்டப் படிப்பு, சட்டப் பட்டப்படிப்பு, விவசாய பட்டப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பு, உடற்கல்வி பட்டப் படிப்பு போன்றவைகளுக்கு ரூ.8000 எனவும், பொறியியல் பட்ட மேற்படிப்பு, மருத் துவப் பட்ட மேற்படிப்பு, சட்டப்பட்ட மேற்படிப்பு, விவசாய பட்ட மேற்படிப்பு, ஆசிரியர் பயிற்சி பட்ட மேற்படிப்பு, உடற்கல்வி பட்ட மேற்படிப்பு போன்ற வைகளுக்கு தலா ரூ.12000 எனவும் அறிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் இறக்கும் தமிழர்களின் மகன் அல்லது மகள் ( இருவருக்கு) திருமண உதவித் தொகையாக ரூ.20000 என அறிவித்து இருப்பது ஏழை எளிய புலம்பெயர் தொழிலாளிகளின் உள்ளத்தில் ஓர் நம்பிக்கை பிறந்துள்ளது. மேலும் முதல் மூன்று மாதங்களில் பதிவு செய்பவருக்கு பதிவுக் கட்டணம் 200 ரூபாய் தள்ளுபடி செய்துள்ள செய்தியானது அனைத்து புலம்பெயர் தமிழர்களையும் உற்சாகப் படுத்தியுள்ளது.
செய்தியறிந்தவுடன், புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் விறுவிறுப்புடன் தங்களது அடையாள அட்டை பதி வினை தொடங்கியுள்ளனர்.
எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று உலக தமிழர்கள் அனைவரும் இன்புறும் இத்தகைய நல்லறிவிப்பை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், அதற்கு உறுதுணையாய் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், புலம்பெயர் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், புலம்பெயர் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, எங்களின் கோரிக்கையை முதலமைச்சரிடம் கொண்டு சேர்த்த தி.மு.கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தி.மு.க அயலக அணித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதிவீராசாமி, தி.மு.க., அயலக அணி செயலாளர், மாநிலங் களவை உறுப்பினர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோருக்கும், மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த புலம்பெயர் தமிழர் நல வாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் தி.மு.க அயலக அணி, குவைத் மற்றும் வெளி நாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம், குவைத் சார்பாகவும் மற்றும் உலக நாடுகளில் வசிக்கும் அனைத்து புலம் பெயர் தமிழர்களின் சார்பாகவும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
-இவ்வாறு ந.தியாகராஜன் அறிக் கையில் தெரிவித்துள்ளார்.