காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி, செப். 4– ஜனநாயக இந்தியாவை, சர்வாதிகார இந்தி யாவாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விரும்புகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கார்கே வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதா வது:
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம், இந்தியாவின் கூட் டாட்சி தத்துவத்தை சீர்குலைக் கும். தேசிய அளவிலும், மாநில அளவிலும் எந்தக் கட்சியுடனும் கலந்தாலோசிக்காமல் ஒன்றிய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்திருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை ஏற் கெனவே 3 கமிட்டிகள் நிராகரித் துள்ளன. இந்த சூழலில் 4ஆ-வது கமிட்டியை ஒன்றிய அரசு நியமித்து இருக்கிறது. ஒன்றிய அரசு நியமித்திருக்கும் குழுவில் தேர்தல் ஆணையத்தின் தரப் பில் எந்த பிரதிநிதியும் இடம் பெறவில்லை. கடந்த 2014 மற் றும் 2019ஆ-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தல்களுக்காக ரூ.5,500 கோடி செலவிடப்பட்டது. இது ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் மிக சொற்ப தொகை. இந்த தொகையில் பணத்தை சேமிக்க திட்டமிட் டுள்ளதாக கூறுவது முட்டாள் தனமானது. தேர்தல் நடத்தை விதிகளை அடிக்கடி அமல்படுத் துவதால் மக்கள் பாதிக்கப்படு கின்றனர் என்றுஒன்றிய அரசு கூறுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தேர்தல்நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்தும் காலத்தை குறைக்கலாம், தளர்வு களை அறிவிக்கலாம். இதுதொ டர்பாக அனைத்து கட்சிகளுட னும் கலந்தோலோசித்து ஒரு மித்த முடிவை எடுக்க முடியும்.
கட்சித் தாவல் தடை சட் டத்தை பாஜக அரசு ஏற்கெனவே நீர்த்து போகச் செய்துவிட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பது பாஜக வின் வழக்கமாக இருக்கிறது. பாஜகவின் கவிழ்ப்பு நடவடிக் கைகளால் 2014ஆ-ம் ஆண்டு முதல் இதுவரை மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகள் என 436 இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டு உள்ளன.
கடந்த 1967ஆ-ம் ஆண்டு வரை மக்களவை, சட்டப் பேர வைகளுக்கு ஒரே நேரத்தில் தேர் தல் நடத்தப்பட்டதாக ஒன்றிய அரசு கூறுகிறது. அந்த காலத்தில் மாநிலங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தன.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளும் குறைவாக இருந்தன. இப்போது 30.45 லட்சம் உள் ளாட்சி பதவிகள் உள்ளன. இந் தியா மிகப்பெரிய ஜனநாயகநாடு. நமது நாட்டில் லட்சக்கணக் கான மக்கள் பிரதிநிதிகள் உள் ளனர். இந்த சூழலில் மக்களவை, சட்டப்பேரவைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்திய மற்றது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என் பது ஜனநாயகத்தை சீர்குலைப் பதற்கான சதி ஆகும். ஜனநாயக இந்தியாவை, சர்வாதிகார இந்தி யாவாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விரும்புகிறது. இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.