சென்னை, மே 22-மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப் பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளி யாகி உள்ளது.பெண்களின் உழைப்புக்கு அங்கீ காரம் அளிக்கும் வகையிலும் அவர் களது சுயமரியாதையை காக்கும் வகை யிலும் தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தில் இணைக்கப்பட் டுள்ள பயனாளிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தற்போது சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயனாளர்களாக உள் ளனர்.
அனைவருக்கும் உரிமைத் தொகையை வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கை பல தரப்பினரிடம் எழுந்து வரும் நிலையில் அதனை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருகிறது. தற்பொழுது முதற்கட்டமாக மக ளிர் உரிமை தொகையில் புதிய விண் ணப்பதாரர்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை அச்சடிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் விண்ணப் பங்கள் அச்சடிக்கப்பட்டு பெண்களிடம் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரைவில் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த முறை இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதா கவும், குறிப்பாக, தமிழகத்தில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளி யாகி உள்ளது. விரைவில் அதற்கான பணியும் தொடங்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
ஆனால், ஜூன் மாதம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட வாய்ப்பு இல்லை. ஜூன் 4 வரை தேர்தல் விதிகள் உள்ளதால் புதிய பட்டியல் எடுக்க முடியாது.
ஜூன் 4க்கு பின் பட்டியல் எடுத்தால் குறைந்தது 2 வாரங்கள் தேவைப்படும். அப்படி பட்டியல் எடுக்கும் பட்சத்தில் ஜூன் 15ஆம் தேதிக்குள் புதியவர்களுக்கு பணம் போட முடியாது.
இதனால் இந்த திட்டத்தில் புதிதாக சேர்க்கப்படுபவர்களுக்கு ஜூன் 15க்கு பதில் ஜூலை 15ஆம் தேதியே பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எப்போது: இந்த திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளை சேர்க்க விண்ணப்பங்கள் ஜூன் இரண்டாம் வாரம் வழங்கப்பட உள்ளது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவு வந்த பின் தேர்தல் விதிகள் தளரும்.
அதனால் அதற்கு பின்பே விண் ணப்பங்களை கொடுக்க முடியும். அதற்கு பின்பே விண்ணப்பம் கொடுக் கப்படும். இந்த திட்டத்தில் கடந்த ஜனவரி கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த மாதம் இதே திட்டம் மறுவாழ்வு முகாம் பெண்களுக் கும் விரிவுபடுத்தபட்டுள்ளது.
அதற்கான ஆணை வெளியிடப்பட் டுள்ளது. அதேபோல் இதுவரையில் விடுபட்ட பெண்களுக்கும் பணம் அனுப்பப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
யாருக்கெல்லாம் வழங்கப்படும்: அதன்படி பின்வரும் மக்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
1. மேனாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கும் பணம் வழங்கப் படலாம்.
2. மேனாள் கார்ப்பரேஷன் ஊழியர் களின் மனைவிகளுக்கும் பணம் வழங் கப்படலாம்.
3. புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர் களுக்கும் பணம் வழங்கப்படலாம்.
4. புதிதாக திருமணம் ஆன பெண் களுக்கும் பணம் வழங்கப்படலாம்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்ட நிலையில், 90 சதவீத மகளிருக்கு உரிமைத்தொகை சென்று சேர்ந்து விட்டது என்றும், தகுதியான ஒருசிலர் விடுபட்டு இருந்தால் அந்த பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க தி.மு.க.வினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தலுக்கு பின் இவர்களுக்கும் பணம் வழங்கப்படும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
தி.மு.க. திட்டம்: ஏற்கெனவே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்தான் இந்த திட்டத்தில் மீண்டும் சேர 11.8 லட்சம் பேர் மறு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அக்டோபர் இறுதி வரை இவர்கள் கொடுத்தனர்.
இப்போது 1.7 கோடி பேருக்கு இந்த பணம் தற்போது கொடுக்கப்பட்டு வருகிறது.