ஒன்றிய அரசில் மார்க்கெட்டிங் அதிகாரி தேவை

viduthalai
1 Min Read

ஒன்றிய அரசில் பல்வேறு காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
மார்க்கெட்டிங் அதிகாரி 33, டிரைனிங் ஆபிசர் (பெண்கள்) 16, உதவி ஆராய்ச்சி அதிகாரி 7, அசிஸ்டென்ட் மைனிங் இன்ஜினியர் 7, இணை பேராசிரியர் 5, பேராசிரியர் 3, அசிஸ்டென்ட் கமிஷனர் 1, சயின்டிபிக் ஆபிசர் 1 உட்பட மொத்தம் 82 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: மார்க்கெட்டிங் அதிகாரி பணிக்கு அக்ரிகல்சர் பிரிவில் முதுநிலை டிகிரி, டிரைனிங் ஆபிசர் பணிக்கு பி.இ.,/ பி.டெக்., மற்ற பணிகளுக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.
வயது: 30.5.2024 அடிப்படையில் மார்க்கெட்டிங் ஆபிசர், டிரைனிங் ஆபிசர், சயின்டிபிக் ஆபிசர் பணிக்கு 30, பேராசிரியர், இணை பேராசிரியர்பணிக்கு 50, மற்ற பணிக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 25. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 30.5.2024
விவரங்களுக்கு: upsconline.nic.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *