சென்னை,மே22- நாடாளு மன்ற தேர்தல் நேரத்தில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் கட் டுக்கட்டாக ரூ.4 கோடி சிக்கியது. இந்தப் பணம் பா.ஜனதா நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திர னுக்கு கொண்டு செல்லப்பட்டது என புகார் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.
இந்த நிலையில் இந்த பணவிவகாரம் தொடர்பாக பா.ஜனதா மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரை விசார ணைக்கு ஆஜராக சி.பி. சி.அய்.டி. காவல்துறையி னர் அழைப்பாணை வழங் கினர். அதில் சென்னை யில் உள்ள சி.பி.சி.அய்.டி. அலுவலகத்தில் இன்று ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தனர். ஆனால் தான் கட்சி பணிக்காக டில்லி செல்ல வேண்டி இருப்பதால் ஆஜராக முடியாது என்றும், வருகிற 30ஆம் தேதிக்கு மேல் சி.பி.சி. அய்.டி. காவல்துறையி னர் எப்போது வேண்டு மானாலும் தன்னிடம் விசாரணை நடத்தலாம் என்றும், அதற்கான தேதியை நீங்களே தெரி விக்கலாம் என்றும் சி.பி. சி.அய்.டி. காவல்துறையி னரிடம் அவர் கூறி இருந் தார். எஸ்.ஆர். சேகர் ஆஜராகததால் அவரி டம் நேரில் விசாரணை நடத்துவதற்காக சென்னை சி.பி.சி.அய்.டி. காவல்துறை டி.எஸ்.பி. சசிதரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நேற்று (21.5.2024) காலை 9 மணி அளவில் கணபதி சக்தி நகரில் உள்ள உள்ள அவரது வீட்டிற்கு சென் றனர். பின்னர் சி.பி.சி. அய்.டி. காவல்துறையி னர் எஸ்.ஆர்.சேகரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ரயிலில் சிக் கிய பணம் எங்கே இருந்து வந்தது. கட்சிக்கும், அந்த பணத்துக்கும் சம்பந்தம் உள்ளதா? என்பது உள் ளிட்ட பல்வேறு கேள்வி களை கேட்டதாக கூறப் படுகிறது. இந்த விசா ரணை சுமார் 2 மணி நேரம் நடந்தது.
பா.ஜனதா நிர்வாகிகளுக்கு அழைப்பாணை
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு பா.ஜனதா அமைப்பு பொதுச் செய லாளர் கேசவ விநாயகம், பொருளாளர் எஸ்.ஆர். சேகர் மற்றும் நிர்வாகி நீல முரளி ஆகிய 3 பேருக்கு சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் விசா ரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பி உள்ள னர்.