சென்னை, மே. 22- தமிழ்நாட்டில் கோடை கால மின் தேவையை சமாளிக்க ரூ. 2,755 கோடிக்கு தனியாரிடம் மின்சாரம் கொள் முதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மின் தேவை நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருந்து வருகிறது. இதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியம் சொந்தமாக மின் உற்பத்திசெய்வதுடன் ஒன்றிய அரசு மற்றும் தனியார் நிறு வனங்களிடமிருந்தும் மின்சா ரத்தை கொள்முதல் செய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் தமிழ்நாட்டின் மின் தேவை தினமும் 19ஆயிரம் மெகாவாட் டாக அதிகரித்தது. இந்த ஆண்டு கோடைக்காலத்தில் அதைவிட அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், நாடா ளுமன்ற தேர்தலும் வந்ததால், அதற்கு முன்னதாகவே தமிழ் நாடு அரசு கூடுதல் மின் தேவையை எதிர்கொள்ள தயா ராகியது.
அதன்படி, கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 2 ஆயிரம் மெகாவாட்டும், கடந்த மாதம் (ஏப்ரல்) மட்டும் காலையில் தினமும் 500 மெகாவாட்டும் மின்சாரம் கொள்முதல் செய் யவும் மின்வாரியம் டெண்டர் கோரியிருந்தது.
ஏற்கெனவே, கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் இம்மாதம் (மே)31ஆம் தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை 850 மெகாவாட்டும். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆயிரம் மெகாவாட்டும் மின் சாரம் வாங்க மின்வாரியம் டெண்டர் கோரியிருந்தது.
இதுதவிர, கடந்த ஜனவரி முதல் மே மாதம் (இந்த மாதம்) வரை 5 மாதங்களுக்கு 24 மணி நேரமும் 200 மெகா வாட் மின்சாரம் வாங்கவும் மின்வாரியம் டெண்டர் கோரியிருந்தது.
அதன்படி, தமிழ்நாட்டில் மின்வெட்டு பிரச்சினை இல்லாத வகையில், கோடை காலத்தில் மின்சாரம் கொள் முதல் செய் தடையில்லாமல் வினியோகிக்கப்பட்டு வரு கிறது. அதிகபட்சமாக கடந்த 2ஆம் தேதி தமிழ்நாட்டின் மின் தேவை 20,820 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை தொட் டது.
இதற்கிடையே கோடைக் கால மின் தேவையை சமாளிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.2,755 கோடிக்கு தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய் துள்ளது. அதாவது, தனியாரி டம் வெவ்வேறு விலைகளில் ஒரு யூனிட் ரூ.9.90-க்கும். ஒரு யூனிட் ரூ.18.50-க்கும் என அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது.
உற்பத்தியை விடவும் அதிக மின் தேவை ஏற்பட்டதால் கூடுதல் மின்சாரம் கொள் முதல் செய்யப்பட்டதாக மின் சார ஒழுங்குமுறை ஆணையத் துக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் கோடை மழையால், வெயில் குறைந்ததுடன் மின் தேவையும் குறைந்திருக்கிறது.
வழக்கமான நாட்களைப் போல் சமநிலை யில் மின் தேவை இருந்து வரு கிறது. இது மின் வாரியத்துக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.