கரூர், செப். 4– கரூர் மாவட்டம், தான்தோன்றி ஒன்றியம், தம்ம நாயக்கன்பட்டியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா! சேரன்மாதேவி குருகுல போராட்ட நூற்றாண்டு விழா! கலைஞர் நூற்றாண்டு விழா! திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க தெருமுனை கூட்டம்! தாந்தோணி ஒன்றிய திராவிடர் கழக சார்பில் மாவட்ட பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் ம. பொம்மன் தலைமையில் நடை பெற்றன. கரூர் மாவட்ட திரா விடர் கழக தலைவர் ப.குமாரசாமி, பொதுக்குழு உறுப்பினர் ம. ஜெக நாதன், காப்பாளர் வே.ராஜு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் மா. ராமசாமி அனைவ ரையும் வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மதுரை சுப. பெரியார் பித்தன் நடத்திய மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றன.
நிகழ்ச்சியில் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த் தினார்.
கிராமப்புறங்களில் ஜாதி வேறுபாடு, பெண் அடிமைத்தனம், குலக்கல்வி,போன்றவற்றை தந்தை பெரியார் ஒலித்த வரலாற்று உண் மைகளையும் விரிவாக பேசினார்.
திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிரா மப்புற மக்களுக்கு பல்வேறு வகை யான திட்டங்களை கொண்டு வந்ததையும், ‘நான் முதல்வன் திட்டம்‘, இலவச பெண்கள் பேருந்து பயணம், இலவச கல்வி, உரிமை தொகை, போன்ற நல்ல பல திட்டங்களை கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சரைப் பற்றி யும், திராவிட மாடல் அரசை பற்றி யும் மக்களுக்கு எடுத்துரைத்தார்.
விடுதலை வாசகர் வட்ட துணை செயலாளர் கவிஞர் கருவூர் கண்ணல் திராவிட மாடல் ஆட்சி சாதனை குறித்து பேசினார்.நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பிரதிநிதி முருகேசன், மேனாள் ஒன்றிய உறுப்பினர் திமுக பி.செல்வம், மேனாள் ஒன்றிய உறுப்பினர் திமுக, கோ.வேலுசாமி, மேனாள் ஒன்றிய துணைச் செயலாளர் திமுக, செல்வராஜ், மேனாள் ஊராட்சி தலைவர் பாகநத்தம் குப்புசாமி, மாவட்ட பிரதிநிதி குப்புசாமி, மாவட்ட பிரதிநிதி மதிமுக சந்திரசேகர், கிளைச் செயலாளர் திமுக தமநாயக்கன் பட்டி லோகநாதன், கிளைச் செய லாளர் திமுக தம்மநாயக்கன்பட்டி கவுதமன், கிளைச் செயலாளர் திமுக தமநாயக்கன்பட்டி நவீன் உள்ளிட்ட திமுக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்..
மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ், அமைப்பாளர் காந்திகிராமம் குமார், கரூர் நகர செயலாளர் சதா சிவம், கிருஷ்ண ராயபுரம் ஒன்றிய தலைவர் பெரு மாள், கடவூர் ஒன்றிய செயலாளர் கார்த்தி, இளைஞர் அணி தோழர் அய்யப் பன் துணைவியார் மகள், வழக் குரைஞர் தமிழ் ராஜேந்திரன், உள் ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலா ளர் காளிமுத்து நன்றி உரை நிகழ்த்தினார்.