சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்ட அனுமதி பெறவில்லை என்றால் கட்டுமானப் பணியை உடனே நிறுத்த வேண்டும் கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மே 22- சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கேரள அரசு உரிய அனுமதி பெற் றுள்ளதா? இல்லாவிட்டால், கட்டு மானப் பணியை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத் தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தேவிகுளம் அருகே உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கரில் விவசாய பாசனம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், தடுப்பணை கட்ட தமிழ்நாடு அரசியல் கட்சித் தலை வர்களும் பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தினர்.

இதையடுத்து, தமிழ்நாடு நீர் வளத் துறை அமைச்சர் துரை முருகன் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டின் உரிமையை சட்ட ரீதியாக மட்டுமல்லாமல் அனைத்து விதத்திலும் நிலைநாட்டுவோம்’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக ஊடகங்களில் வெளி வந்த செய்திகளின் அடிப்படையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத் தின் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் அமர்வு, சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப் பணை கட்டும் விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காக எடுத்து நேற்று விசாரித்தனர்.
தீர்ப்பாயம் கேள்வி: அப்போது, சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப் பணை கட்டுவதற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய வன விலங்குகள் வாரியத்திடம் கேரள அரசு உரிய அனுமதி பெற்றுள்ளதா? என கேள்வி எழுப் பினர். உரிய அனுமதி பெறப் படாவிட்டால் தடுப்பணை கட் டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், தடுப்பணை கட்டுவ தால் தமிழ்நாட்டுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட தீர்ப்பாயம், விசாரணையை வரும் 24ஆ-ம் தேதிக்கு தள்ளிவைத்தது. அன்றைய தினம், கேரள அரசும், தமிழ்நாடு அரசும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளன. இதற்கிடையே, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டப்படும் முயற்சி குறித்து அமராவதி ஆற்றுப் படுகை பகுதியை சேர்ந்த பொது மக்கள்,விவசாயிகள் கூறியதாவது:

கேரளாவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் குடிநீர் தயாரிப்பு ஆலைக்காக இந்த அணை கட்டப் படுவதாக கூறப்படுகிறது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், அமராவதி அணைக்கு வரும் நீர் வரத்து முற்றிலுமாக குறைந்து, ஆற்றுப்படுகை முழுவதும் பாலை வனமாகும் சூழல் உருவாகும்.
தமிழ்நாடு அரசுக்கு தெரியாமல் கேரள அரசு அணை கட்டுவதற் கான சாத்தியக்கூறு இல்லை. எனவே, பல ஆயிரம் ஏக்கர் விவ சாய நிலங்களின் பாசன வசதியை யும், பல லட்சம் மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்துவரும் அமராவதி அணையின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் கேரள அரசின் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த விவகாரத்தை தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பது அவர்களுக்கு ஆறு தலாக அமைந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *