இணையதளப் பயன்பாட்டுக்கு அடிமை யாவோருக்கு ஏற்படும் ‘இன்டெர்நெட் அடிக்ஷன் டிஸார்டர்’ என்ற நோய் உலகை அச்சுறுத்தி வருவதாகவும், பெற்றோர், இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மனநல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
குடிப்பழக்கம், புகைப்பிடிப்பது போன்ற போதைப் பழக்கங்களுக்கு மட்டுமே பெரும்பாலானோர் அடிமையாக இருப்ப தாக கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இணையத்துக்கும், சமூக வலைதளங்களுக் கும் கூட ஏராளமானோர் அடிமையாக இருக்கின்றனர்.
தற்போது பலரது வாழ்வின் அங்கமாக இணையப் பயன்பாடு மாறிவிட்டது. ஒருவரை விமர்சிப்பதில் தொடங்கி, காதல், திருமணம் வரை இணையத்துக்கும், சமூக வலைதளத்துக்கும் இளைய சமுதாயத்தினர் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சமூக வலைதளங்களிலும், இணைய விளை யாட்டுகளிலும் இரவு தூக்கத்தை தொலைக் கும் இளைஞர்கள், அதனால் மனஉளைச் சலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
இந்தியாவின் இணையதளம் மற்றும் செல்போனுக்கான சங்கம் (அய்ஏஎம்ஏஅய்) கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் 75.9 கோடி பேர் இணைய பயனாளர்களாக உள்ளனர். இதில் 36 கோடி பேர் நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்க ளும், 39.9 கோடி பேர்கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும். இவர்களில் பெரும்பாலா னோர் இணையத்தை அணுகுவதற்கு அலைபேசிகளைப் பயன்படுத்துவது குறிப் பிடத்தக்கது. இந்த எண்ணிக்கை 2025ஆம் ஆண்டுக்குள் 90 கோடியாக உயரும் என் றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பெற்றோர் கருத்து
தேனாம்பேட்டை கா.லட்சுமி: பள்ளி முடிந்து வரும் குழந்தைகள்தற்போதெல் லாம் புத்தகங்களை எடுத்துப் படிப்பதே இல்லை. அலைபேசியைக் கையில் எடுத் துக்கொண்டு, மணிக்கணக்கில் அமர்ந்து விடுகின்றனர். அதில் விளையாடிக் கொண் டும், சக மாணவர்களுடன் வாட்ஸ்-அப்பில் அரட்டையடித்துக் கொண்டும் நேரத்தைப் போக்குகின்றனர். இவர்களை கண்டிக்கவும் முடிவதில்லை.
கொரட்டூர் சிறீதர்: வீட்டில் பிள்ளைகள் எப்போதும் அலைபேசியுடன்தான் திரிகின் றனர். தொலைக்காட்சி பார்ப்பதைக்கூட தவிர்க்கின்றனர். விளையாட வெளியே செல்வதில்லை. நண்பர்களைச் சந்திக்கப் போவதில்லை.வீட்டிலேயே அடைந்து கிடக்கின்றனர். அலைபேசியைப் பிடுங் கினால், பாடத்திட்டம் தெரியாது என்று மல்லுக் கட்டுகின்றனர். இவர்களைக் கட்டுப் படுத்துவது சவாலாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக இயக்குநர் மீ.மாலையப்பன் கூறும்போது, ‘‘பள்ளிக் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் இணையத்தைப் பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இணைய விளையாட்டுகள், சமூக வலைதளங்கள் மட்டுமின்றி, ஆபாச தளங்களிலும் இளைய தலைமுறை அதிக நேரத்தைச் செலவிடுகின்றது. அத்தியா வசியமாக இருக்கும் ஒரு சேவை, அளவுக்கு மீறும்போது போதைப்பழக்கமாக மாறு கிறது. இதனால் தங்களது கடமைகளை மறக் கின்றனர். இணையம் இல்லாமல் இருக்க முடியாத நிலைக்குச் சென்றுவிடுகின்றனர்.
அவர்களிடம் இருந்து அலைபேசியைப் பறிக்கும்போது கடும்கோபத்துக்கு உள் ளாகி, கத்தத்தொடங்குகின்றனர். இவை யெல்லாம் இணையப் பயன்பாட்டுக்கு அடிமையாக இருப்பதன் ஒரு நிலையாகும். எனவே, மாணவர்களுக்கும், பெற்றோர்க ளுக்கும் போதிய விழிப்புணர்வை ஏற் படுத்த வேண்டும்’’ என்றார்.
மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார் கூறும்போது, ‘‘உலகஅளவில் ‘இன்டெர் நெட் அடிக்ஷன் டிஸார்டர்’(Internet addiction disorder) என்ற நோய் அதி கரித்துவருகிறது. இதில் 10 முதல் 20 வயதி லான இளைஞர்கள்தான் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். இணையப் பயன் பாட்டுக்கு அடிமையாகும் இளைஞர்களின் மூளையில் ஹார்மோன் அழுத்தம் உண் டாகி, மீண்டும் மீண்டும் அதே செயலில் அவர்களை ஈடுபட வைக்கிறது.
தாழ்வு மனப்பான்மை: இதனால் மது வுக்கு அடிமையானவர்களுக்கு ஏற்படும் கை நடுக்கம், படபடப்பு இவர்களுக்கும் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்படு வோர், மற்றவர்களிடம் பழகுவதை தவிர்க் கும் மனநிலைக்கு வந்துவிடுவர். தனி மையை விரும்புவர். மேலும், தாழ்வு மனப் பான்மைக் கொண்டிருப்பர்.
கரோனாவுக்குப் பின் இந்தியாவில் இணையப் பயன்பாட்டுக்கு அடிமையான வர்கள் எண்ணிக்கை 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம்வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றில் இருந்து விடுபட, வீடுகளில் இரவு 9 மணிக்குமேல் இணையத்தை பயன்படுத்துவதை குடும்ப மாக குறைத்துக் கொள்ள வேண்டும். சாப் பிடும் நேரங்களில் அலைபேசி உபயோ கத்தை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளை வெளிப்புறங்களில் விளையாட ஊக்குவிக்க வேண்டும். மன துக்கும், உடலுக்கும் உற்சாகத்தை அளிக்கக் கூடிய செயல்களில் கவனத்தை செலுத்த வேண்டும். இதன் மூலம் இணையதளப் பயன்பாட்டை குறைக்கலாம்’’ என்றார்.