திருநின்றவூர், மே 21- ஆவடி மாவட் டம் திருநின்றவூர் பகுதி திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 19.05.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு 2/444 பாலாஜி நகரில் உள்ள திருநின்றவூர் பகுதி கழக செயலாளர் கீதா இராமதுரை இல்லத் தில் திருநின்றவூர் பகுதி கழக இளை ஞரணி அமைப்பாளர் மா.சிலம்பர சன் கடவுள் மறுப்பு கூற ஆவடி மாவட்ட கழக துணை தலைவர் மு.ரகுபதி தலைமையில் நடை பெற்றது.
கூட்டத்தில், மாவட்ட கலந்துரை யாடல் கூட்டத்தை வாய்ப்பு உள்ள தோழர்களின் இல்லத்தில் நடத்துவது எனவும், சூன் மாதம் குடி அரசு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா தெரு முனைக் கூட்டம் நடத் துவது எனவும், விடுதலை சந்தா திரட்டலில் தீவிர கவனம் செலுத் துவது எனவும், மாவட்ட மகளி ரணியை ஒருங்கிணைத்து மகளிரணி கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆவடி மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன், ஆவடி மாவட்ட தொழிலாளரணி தலைவர் கி.ஏழு மலை, துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன்,திருநின்றவூர் பகுதி கழக தலைவர் அருண், பட்டாபிராம் பகுதி தலைவர் வேல்முருகன், திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள் தாஸ், வேப் பம்பட்டு ஒன்றிய செயலாளர் சிவ.இரவிச்சந்திரன், பூந்தமல்லி ஒன் றிய செயலாளர் சு.வெங்கடேசன், ராணி ரகுபதி, கீதாஇராமதுரை ஆகியோர் உரையாற்றினர். நிறை வாக ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கலைவேந்தன் நன்றி கூறினார்.