21.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானா மாநிலம் உருவாகி பத்தாண்டுகள் நிறைவு விழா ஜூன் 2-ஆம் நடைபெறும். சோனியா பங் கேற்க அழைப்பு, முதலமைச்சர் ரேவந்த் தகவல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*மோடி தேர்தல் ஆணையத்தை வீட்டு உதவியாளர் போல பயன்படுத்துகிறார். தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக உள்ளது என உத்தவ் கடும் குற்றச்சாட்டு.
* பூரி ஜகந்நாதர் கடவுள், மோடியின் பக்தர்’ என பாஜக வேட்பாளர் சம்பித் பத்ராவின் பேச்சால் சர்ச்சை – கோடிக்கணக்கான ஒடிசா மக்களின் உணர்வுகளை புண் படுத்தி விட்டதாக முதலமைச்சர் நவீன் பட்நயாக் குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
*காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியின் படி, அனைத்து துறைகளிலும் உள்ள அரசு ஒப்பந்த வேலைகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் உத்தரவை கருநாடக அரசு வெளியிட்டது, இந்த பதவிகளில் 33% இட ஒதுக்கீடு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தி டெலிகிராப்:
* தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் அய்ந்தாவது சுற்று வாக்குப்பதிவுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி வெளியேற இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய் ராம் ரமேஷ் திட்டவட்டம். நாடு முழுவதும் மாற்றத்தின் காற்று வீசுகிறது என்றும் இந்தியா கூட்டணி பாஜக ஆட்சியை துடைக்க உள்ளது என்றும் கருத்து.
தி இந்து:
* தான் அன்றும், இன்றும் ஆர்.எஸ்.எஸ். தான் என்று பணி நிறைவு விழாவில் கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சித்த ரஞ்சன் தாஸ் பேச்சு.
– குடந்தை கருணா