விருத்தாசலம், மே 21- விருத்தாசலம் கழக மாவட்ட கழகம் சார்பில், சுய மரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு விழா நடை பெற்றது.
சுயமரியாதை இயக்க நூற் றாண்டு, குடி அரசு நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று திரா விடர் கழகத்தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் அறிவித்த தற்கிணங்க மே 3 ஆம் நாள் மாவட்ட தலைவர் அ.இளங்கோவன் தலை மையில் விருத்தாசலம் பாலக்கரை திலீபன் சதுக்கத்தில் நூற்றாண்டு விழா கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக விருத்தாசலம் நகர செயலாளர்
மு. முகமது பஷீர் வரவேற்புரையாற்றி னார்.
பொதுக்குழு உறுப்பினர் தங்க.ராசமாணிக்கம், விருத்தாசலம் நகர தலைவர் ந. பசுபதி, ஒன்றியத் தலை வர் கி.பாலமுருகன், மாவட்ட தொழி லாளரணி அமைப்பாளர் பி.பழனிச் சாமி ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
மாவட்டச் செயலாளர் ப.வெற் றிச்செல்வன் இணைப்புரையாற்றி னார். கழகக் காப்பாளர் புலவர் வை.இளவரசன் தொடக்கவுரை யாற்றினர். தலைமைக் கழக அமைப் பாளர் த.சீ.இளந்திரையன் கருத் துரையாற்றினார். இதனைத் தொடர்ந்து கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி, சிறப்புரையாற்றும் போது, சுயமரி யாதை இயக்கம் யாருக்காக தோன் றியது. சுயமரியாதை இயக்கம் மக் களுக்காக செய்த நன்மைகள், அதன் சாதனைகள் பற்றியும், நூற்றாண்டு காணும் குடிஅரசு இதழ் சுயமரி யாதை இயக்கத்தின் போர்க் கருவி யாக எவ்வாறு செயல்பட்டது என்ப தையும் விரிவாக விளக்கிப் பேசி னார்.
கூட்டத்தில், கம்மாபுரம் ஒன்றியத் தலைவர் நா.பாவேந்தர் விரும்பி, திட்டக்குடி நகர தலைவர் வெ.அறிவு, நல்லூர் ஒன்றிய தலைவர் ந.சுப்ர மணியன், விருத்தாசலம் நகர செய லாளர், நகர அமைப்பாளர் சு. காரல் மார்க்ஸ், பெண்ணாடம் நகர தலை வர் செம்பேரி ராஜேந்திரன், நகர செயலாளர் அ.பச்சமுத்து, மாவட்ட இளைஞரணி தலைவர் செ.சிலம் பரசன், வேப்பூர் வட்டாரச் செயலா ளர் ம.இளங்கோவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங் கட.ராசா, பெண்ணாடம் நகர அமைப்பாளர் வழக்குரைஞர் வேல வன், நல்லூர் ஒன்றிய அமைப்பாளர் கருப்புசாமி, மாவட்ட மாணவர் கழக செயலாளர் வழக்குரைஞர் சு.தமிழ்ச் செல்வன், திட்டக்குடி ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சே.பெரி யார்மணி நன்றி கூறினார்.