பி.ஜே.பி.யின் அரசியல் அகிலேஷ் குற்றச்சாட்டு
அரசியல் எதிரிகளைப் பழி வாங் குவதற்கு மட்டுமே அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. கூட்டணி களை உடைக்க அவை துணை போகின்றன. சி.பி.அய். சோதனையை தவறாக பயன்படுத்துவதன் மூலம் மிரட்டி பணம் பறிக்கின்ற செயலிலும் அவை ஈடுபடு கின்றன.
உங்களின் ஒரு வாக்கு!
உங்களுடைய ஒவ் வொரு வாக்கின்மூலமும் ஏழை குடும்பத்தாரைச் சேர்ந்த பெண்களின் வங் கிக் கணக்கில் ஆண்டு தோறும் ரூபாய் ஒரு லட்சம் வழங்க முடியும். ஒவ்வொருவரும் ரூபாய் 25 லட்சம் வரையில் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். 30 லட்சம் இளைஞர் களுக்கு அரசு வேலை வழங்கப்படும். ஆண்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பழகுநர் பயிற்சி பெற்றுக் கொள்ள முடியும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவுகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும். உங்களின் ஒரு வாக்கு இந்தியாவின் ஜனநாயகம் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும். உங்களின் ஒரு வாக்கு நாட்டை பண வீக்கத்தில் இருந்து விடுவிக்கும். வேலையின்மை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும்.
எனவே அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண் டும் என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
வாயால் கெட்ட சிறுவன்
கடந்த 13ஆம் தேதி நடை பெற்ற நான்காவது கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் உத்திரப்பிரதேசம் பருக் காப்பா தொகுதி வாக்குச் சாவடி ஒன்றில், 17 வயது சிறு வன், தாமரை சின்னத்திற்கு எட்டு முறை வாக்களித்துள் ளான். இதனை அவனே தனது கைப்பேசியில் காட்சிப் பதிவாகவும் பதிவு செய்தான். காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் ஆகியோர் தங்கள் ‘எக்ஸ்’ தளத்தில் இதனைப் பதிவு செய்துள்ளனர்.
இதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பூத் கமிட்டி சூறையாடும் கமிட்டியாக தான் இருக்கும் என்று அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சிறுவன் கிராம பஞ்சாயத்து தலைவரின் மகனாவான். இந்த பிரச்சினை சூடு பிடித்த நிலையில் அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.