சென்னை, மே 21- மின்சார வாரியத்தின் அனைத்து சேவைகளையும் ஒரே இணையதளத்தில் பெறும் வகையில் புதிய இணையதள முகவரியை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய இணையதளத்தில் மின்கட்டணத்தை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எலக்ட் ரானிக் யுகத்தின் வேகத்திற்கு ஏற்ப மக்களும் வேகமாக ஓடிக்கொண்டிருகின்றனர். அந்த வகையில் பரபரப்பான வாழ்க்கையில் மின்சாரம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. எந்தவித பொருளாக இருந்தாலும் மின்சாரத்தின் உதவி அத்தியாவசிய தேவையாகவே உள்ளது. சிறிது நேரம் மின்வெட்டு ஏற்பட்டாலே மக்கள் தவிக்கும் நிலையானது தற்போது உருவாகியுள்ளது. மின் கட்டணம் செலுத்துவதாக இருந்தாலும், புதிய மின் இணைப்பு தேவைப்படுவதாக இருந்தாலும் நேரில் சென்று விண்ணக்கும் முறையானது இருந்து வந்தது.
இந்த நிலையில் நவீன யுகத்திற்கு ஏற்ப இணைய வழியில் மின் கட்டணம் செலுத்துவது, புதிய மின் இணைப்பை பெறுவது, மின் இணைப்பு தொடர்பான தேவைப்படும் ஆவணங்கள் தொடர்பாக தனித்தனி இணையதள முகவரியை தமிழ்நாடு மின்சார வாரியம் உருவாக்கியிருந்தது இந்தநிலையில், மின் வாரியம் தொடர்பாக அனைத்து இணையதள சேவைகளும் இப்போது ஒரே முகவரியில் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பையும் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
புதிய முகவரியான https://app1.tangedco.org/nsconline/ புதிய இணையதளத்தில் பொது தகவல்கள், தேவைப்படும் ஆவணங்கள், விநியோக பிரிவுகள், செலுத்த வேண்டிய கட்ட ணங்கள், கால அவகாசங்கள் என பல தகவல்களை பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியின் காரண மாக பல முகவரிகளை சென்று தேடாமல் ஒரே முகவரியில் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் சேர கால நீட்டிப்பு