ஒரு மணிநேரத்தில்…. உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு ஓராண்டு விடுதலை சந்தா வழங்கி சிறப்பித்த உரத்தநாடு தெற்கு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூர் பி.கலைவாணன், ஒக்கநாடு மேலையூர் சாமி பந்தல் செ.சபரிநாதன், ஒக்கநாடு மேலையூர் காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர்இரா.விவேகானந்தன், ஒக்கநாடு மேலையூர் கிளைக்கழக செயலாளர் நா. வீரத்தமிழன், ஒக்கநாடு மேலையூர் சிவாவெல்டிங் தி.சிவா, தஞ்சை மருத்துவக் கல்லூரி டி. செல்வராசு, ஒக்கநாடு மேலையூர் பி.லெட்சுமணன்ஆகியோருக்கு உளங்கனிந்த நன்றியை தெரிவித்து மகிழ்ந்தோம்! பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா.இராமகிருஷ்ணன், கட்டட எழிற்கலை வல்லுநர் பொறியாளர் பாலகிருஷ்ணன், வழக்குரைஞர் க. மாரிமுத்து உள்ளிட்ட ஒக்கநாடு மேலையூர் கிளைக் கழக தோழர்கள்களப்பணி வீரர்கள் அனைவருக்கும் உளமார்ந்த பாராட்டுகள்!
தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கணியூர் க. கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஜெ. தம்பி பிரபாகரன் ஆகியோர் முதல் தவணையாக 10 விடுதலை சந்தாவை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஜெ. தம்பிபிரபாகரன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் மற்றும் தாராபுரம்,பொள்ளாச்சி கழக மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளனர் (18-05-2024, கணியூர்).
தஞ்சாவூர் காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்டத்தலைவர் பி.ஜி.இராஜேந்திரன், தஞ்சாவூர் பொறியாளர்கள்
கோ.இரவிச்சந்திரன் -கீதப்பிரியா இணையர், தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி குழும தலைவர் கே.மருதுபாண்டியன் ஆகியோர் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாரிடம் விடுதலை 10 ஆண்டு சந்தாக்களுக்கான தொகை 20,000த்தை வழங்கினர். திராவிடர் கழக காப்பாளர் மு.அய்யனார், தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், மாநகரஇணைச்செயலாளர்இரா.வீரகுமார் ,மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் உடன் உள்ளனர். (18-05-2024).
தஞ்சாவூர் மாநகராட்சி மேயரும், தி.மு.க தஞ்சை மாநகர செயலாளருமான சண்.இராமநாதனை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கழக காப்பாளர் மு.அய்யனார், கிராம பிரச்சார மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன். தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், மாநகர இணைச்செயலாளர் இரா.வீரகுமார், மாநகர துணைச் செயலாளர் இரா.இளவரசன் ஆகியோர் சந்தித்தனர். விடுதலை சந்தாக்களை பெருமளவில் திரட்டித் தருவதாக உறுதியளித்து ரசீது புத்தகங்களை பெற்றுக் கொண்டார் (18-05-2024).
திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாவட்ட பொறுப்பாளர் புலவர் செல்ல கலைவாணன், பேரா. செயக்குமார்,
பேரா. த.நெடுமாறன், தொழிலதிபர் தங்கத்தம்பி, தமிழ் தேசிய கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.பி.தமிழ்நேசன் ஆகியோர் தஞ்சை தெற்கு ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் நெல்லுப்பட்டு இராமலிங்கத்திடம் தலா ஓராண்டு விடுதலை சந்தாவினை வழங்கினர். நிகழ்வின்போது தஞ்சை தெற்கு ஒன்றிய திராவிட தொழிலாளர் அணி தலைவர் ஆ. ராமகிருஷ்ணன், புலவர் மோகன்தாஸ், அமிர்தா புத்தக நிலைய உரிமையாளர் மா.திராவிட செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.