சென்னை, ஆயிரம்விளக்கு பகுதி யில் 1845 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி கந்தசாமி மற்றும் தனலட் சுமி இணையருக்கு மகனாக பிறந்தார். இவர் தனது இயற்பெயரான ‘காத்த வராயன்’ என்பதை தனது குரு ‘கவி ராஜ வீ.அயோத்திதாசப் பண்டிதர்’ மீது கொண்ட பற்றின் காரணமாக ‘அயோத் திதாசர்’ என மாற்றிக் கொண்டார்.
தென்னிந்தியாவின் ஜாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். அயோத்திதாசர் தங்கள் குடும்ப மருத் துவர் என திரு.வி.க தன் நாட்குறிப்பு களில் குறிப்பிட்டுள்ளார்.
1885 இல் நண்பர் ஜான் ரத்தினத் துடன் இணைந்து ‘திராவிடப் பாண்டி யன்’ எனும் இதழைத் தொடங்கினார்.
1890 இல் ஜாதி பேதமற்ற திராவிட மகாஜன சபை என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.
1892 இல் நீலகிரி மாநாட்டு தீர் மானத்திலேயே அயோத்தி தாசர் இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத் தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவ உரிமையையும் ஆணுக்கும், பெண்ணுக்கும் சட்டபூர்வ மான சம உரிமை தேவை என்பதையும் அயோத்திதாசர் வலியுறுத்தி வந்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்க, ‘ஆதிதிராவிடர்’ எனும் சொல்லை அவர் முதன்முதலில் பயன்படுத்தினார்.
அயோத்திதாசர் நீலகிரியில் தங்கி யிருந்த 17 ஆண்டுகள் ‘துளசி மாடம்’, ‘அத்வைதானந்த சபை’ உள்ளிட்ட வற்றை நிறுவி, குடில் அமைத்து மருத்துவம் பார்த்தார்.
1907ஆம் ஆண்டு ஜூன் மாதம், ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற இதழைத் தொடங்கினார். பின்னர் 1908இல் அவ்விதழ் ‘தமிழன்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1898 இல் சென்னை, ராயப்பேட் டையில் ‘தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்கம்’ எனும் அமைப்பை நிறுவினார்.
கார்த்திகை தீபம், தீபாவளி, பொங் கல், திருமணச் சடங்கு, இறுதிச் சடங்கு உள்ளிட்ட சடங்குகள் எல்லாம் பவுத் தம் வசம் இருந்தவை என்றும் காலப் போக்கில், இவையெல்லாம் எப்படி இந்துமயமானது என்பதையும் விளக்கி எழுதினார்.
1891-இல் இரட்டைமலை சீனிவாச னுடன் இணைந்து ஆதிதிராவிடர் மகாஜன சபையைத் தோற்றுவித்தார்.
தாழ்த்தப்பட்டோர் அரசியல் மற்றும் திராவிடச் சிந்தனைகளின் முன்னோடியாக கருதப்படுகிறார்.
படைப்புகள்
விபூதி ஆராய்ச்சி, கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி, அரிச்சந்திரனின் பொய்கள், திருவள்ளுவர் வரலாறு, புத்த மார்க்க வினா – விடை உள்ளிட்ட சுமார் 25 நூல்கள்⸴ 30 தொடர் கட்டு ரைகள்,⸴ 2 விரிவுரைகள், 12 சுவடி களுக்கு உரை எனச் சில நூறு கட்டுரைகளை எழுதியுள்ளார்.
இவர் ‘திரிக்குறள்’ என்ற பெயரில் எழுதிய திருக்குறள் உரையானது 55 அதிகாரங்களுடன், இவர் காலமான காரணத்தால் நின்று போனது.
விருதுகள்
தமிழ்நாடு அரசு, அரசு சித்த மருத் துவமனைக்கு, அவரின் நினைவாக, ‘அரசு அயோத்திதாசர் சித்த மருத்துவ மனை’ எனப் பெயர் சூட்டியுள்ளது.
கைம்பெண் மறுமணம், பெண் களுக்கு தொழில்கல்வி , இட ஒதுக்கீடு, சமஉரிமை ஆகியவற்றை கோரியபடி யால் இவர் ‘தென்னிந்தியாவின் சமூக சீர்திருத்தங்களின் தந்தை’ என்று அழைக்கப்பட்டார். இவரது நூல்கள் தமிழ்நாடு அரசால் நாட்டுடமையாக் கப்பட்டுள்ளது .