திருவள்ளூர், மே 20- திருவள்ளூர் மாவட்டததில் ‘விடுதலை’ சந்தா திரட்டும்பணியில் கழகப் பொறுப் பாளர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டதில் கடந்த 19-5-2024 அன்று வீடு தோறும் விடுதலை நாளிதழை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மா.மணியின் வழிகாட்டுதலின்படி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ந.அறிவுச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் இரா.ஸ்டாலின் ஆகியோர் மாவட்ட முழு மையும் சென்று ‘விடுதலை’ நாளிதழுக்குச் சந்தா சேர்க்கும் பணியை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் சென்னை துறைமுகத்தில் பணி செய்யும் வெங்கடேசன், கிராம கமிட்டித் தலைவர் சத்திய முல்லை, மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர் தணிகைவேல் அவர்களும் திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகனா ‘விடுதலை’க்கு ஆண்டு சந்தா வழங்கி ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கரத்தினையும், தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளையும் என்றும் உயர்த்திப் பிடிக்க நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று ஆதரவு தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ‘விடுதலை’ சந்தா திரட்டும்பணி தீவிரம்
Leave a Comment