தமிழ்நாடும் – உ.பி.யும்

2 Min Read

மோடி ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் செலவிட்ட மொத்த தொகை 287.53 இலட்சம் கோடி – அதில் நாட்டின் பாதுகாப்பு, கடன் அதற்கான வட்டி ஆகியவற்றுக்கு செலவிட்ட தொகை 97.25 இலட்சம் கோடி – மீதமுள்ள தொகை 150.28 இலட்சம் கோடி.
அதில் தமிழ்நாட்டுக்கு பகிர்ந்தளித்த வரி 2.92 இலட்சம் கோடி – தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு திட்டங்களை செயல்படுத்த ஒதுக்கிய தொகை 2.56 இலட்சம் கோடி – ஆக மொத்தம் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி 5.48 இலட்சம் கோடி.

அதாவது கடந்த 10 ஆண்டுகளில் இராணுவம், கடன், வட்டி ஆகியவற்றுக்கு செலவிட்டது போக மீதமுள்ள 190.28 இலட்சம் கோடியில் தமிழ்நாட்டுக்கு கிடைத்தது. 5.48 இலட்சம் கோடி சுருக்கமாக சொன்னால் 2.85%.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 6% மக்கள் தமிழ்நாட்டில் வசிக்கிறார்கள். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.68%. தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. இருந்தும் தமிழ்நாட்டுக்கு கிடைத் தது வெறும் 2.88%.
அதே நேரத்தில் உத்தரப்பிரதேசத்திற்கு தோரா யமாக 10 ஆண்டுகளில் 13 விழுக்காட்டிற்கு மேல் நிதி ஒதுக்கி உள்ளது ஒன்றிய அரசு.

மோடி ஆட்சிக்கு வந்து தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்கிய நிதியில் உள்கட்டமைப்பு, கல்வி சுகாதாரம் உள்ளிட்டவற்றிற்கு நிதி ஒதுக்கி மூன்று துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி உள்ளது.
இந்தக் குறைவான நிதியிலும் தமிழ்நாடு பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து பேரிடர்களை எதிர் கொண்டு வலுவான மாநிலமாக திகழ்கிறது.
அதே நேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் 13 விழுக்காடு செலவிட்டும் அங்கு இன்றும் குழந்தைகள் மருத்துவ மனையில் சிகிச்சையின் போதே பெரிய அளவில் மரணிக்கும் அவலம்!
இரவு செல்வந்தர்களின் வீடுகளில் மீந்து போகும் ரொட்டிகளைச் சேகரித்து அதை மதிய உணவாக வெறும் ரொட்டியும் உப்பும் கொடுக்கும் கொடூரம்! (இதைப் படம் பிடித்து வெளியிட்ட ஊடகவியலாளர் மீது தேசப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்ததுதான் கொடூரம்).

மருத்துவமனைகள் உயர்ஜாதியினருக்கு மட்டுமே என்ற நிலை!
கடந்த ஆண்டு மீரட் பகுதியில் தாழ்த்தப் பட்ட பெண் ஒருவர் பிரசவ வேதனையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற வந்தார்; வலி தாங்க முடியாமல் அங்கிருந்த படுக்கையில் அமர்ந்த அவரை மருத்துவமனை ஊழியர்களும் சில செவிலியர்களும் இழுத்துவந்து மருத்துவ மனைக்கு வெளியே தள்ளி விட்டனர்.
மருத்துவமனையின் வாசலிலேயே குழந்தை பெற்று மயங்கிக்கிடந்த கொடூர நிகழ்வு காணொ லியாக பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதாவது உத்தரப்பிரதேசத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் கொடுத்த நிதி அனைத்தும் என்ன ஆனது என்றே தெரியவில்லை. அதே போல் மோடி ஓடி ஓடிச்சென்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களையும் அறிவிக்கிறார். அதுவும் எல்லாம் அரைகுறையாக திறக்கப்பட்டு முடங்கிக் கிடக்கிறது.
நடந்து முடிந்த பள்ளி இறுதித் தேர்வுகளில் கடைசி இடம் – பிஜேபி ஆட்சி செய்யும் உ.பி.க்கே.
பள்ளிகள் மாலை நேர முடிவுக்குப்பின் பசு மாட்டுக் கொட்டகைகளாகி விட்டன. கேட்டால் கோமாதா கோஷம்!
திராவிடம் என்பது எத்தகையது என்பதற்கு ஆதாரம் தமிழ்நாடு – ஆரியம் என்பதற்கு அளவு கோல் உ.பி.,

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *