சென்னை, செப்.5 தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 18-ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுவதை ஒட்டி தி.மு.க நாடா ளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 16-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும். அண்ணா அறிவாலயத்தில் நடை பெறும் கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.