திருச்சி, மே 19 – திருச்சி திருவெறும்பூர், எழில்நகரை சேர்ந்தவர் இலட்சுமணன். இவர் பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் திராவிடர் கழகத்திலோ, திராவிடர் தொழிலாளர் கழகத்திலோ கூட உறுப்பினராக இருந்த தில்லை. ஆனால் உள்ளத்தால் உணர்வால் பெரியார் தொண் டராக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் இலட்சுமணன் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந் தார். ஆனால் நோய் முற்றிய நிலையில், அவருடைய இறப்பு மருத்துவர்களால் உறுதி செய் யப்பட்டது. இதனை அறிந்த இலட்சுமணன் தனது மனைவி, பிள்ளைகளை அழைத்து தான் இறந்த பின்பு எந்தவித மூடச் சடங்குகளும் செய்யக்கூடாது. மேலும் தனது மனைவியின் பொட்டை அழிப்பது, பூவைப் பறிப்பது, வளையல்களை உடைப்பது போன்ற எந்தவித சடங்கும் செய்யக் கூடாது என்று கூறியுள்ளார்.
மேலும் தான் இறந்த பின்பு திராவிடர் கழகத் தோழர்களி டம் தெரிவித்து, அவர்களின் முறைப்படி இரங்கல் கூட்டம் நடத்தி வீரவணக்கம் செலுத்த வேண்டும். பின்னர் எனது உடலை திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஒப்ப டைக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி மாலை 4.15 மணியள வில் இலட்சுமணன் இயற்கை எய்தினார். இதையடுத்து திரு வெறும்பூர் ஒன்றிய செயலாளர் மாரியப்பனுக்கு தெரிவிக்கப் பட்டது. தகவலறிந்த பெல் ம.ஆறுமுகம், பெல் அசோக் குமார்,செ.பா.செல்வம், பெல் செங்குட்டுவன், விடுதலை கிருட்டிணன், தாமஸ் உள் ளிட்ட தோழர்கள் அங்கு சென்று மறைந்த இலட்சும ணன் உடலுக்கு கழகக் கொடி போர்த்தி வீரவணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து மே 17 ஆம் தேதி மறைந்த இலட்சுமணன் இல்லத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு தலைமை வகித்து பெல் ம.ஆறுமுகம் பேசுகையில், மறைந்த இலட்சுமணனின் கொள்கை உணர்வு, தந்தை பெரியார், அண்ணல் அம் பேத்கர் கொள்கை வழியில் வாழ்ந்து, தனது துணைவியா ருக்கு மிகுந்த மரியாதை கொடுத்தவர். தனது பிள்ளை நல்லமுறையில் வளர்த்துள் ளார். வாழும் போது சமுதாயப் பற்றுடன் வாழ்ந்து மறைந்த பின்னரும் மருத்துவக்கல்லூ ரிக்கு தனது உடலை கொடை யாக வழங்கி முன்மாதிரியாக விளங்குகிறார் என்று கூறினார்.
தொடர்ந்து ஒன்றிய செயலாளர் இரா.தமிழ்ச்சுடர், பெல் திராவிடர் தொழிலாளர் கழகச் செயலாளர் ஆ.அசோக் குமார் தி.தொ.க .நிர்வாகி செ.பா.செல்வம்,எழில் நகர் வளர்ச்சி சங்கச் செயல் தலைவர் நீலமேகம், எழில்நகர் வளர்ச்சி சங்க துணைத் தலை வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பொறுப்பாளருமான செல்வராசு மற்றும் மறைந்த லட்சுமணன் உறவினர் சக்திவேல் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். இந்நிகழ்வில் பெல் ஆண்டிராசு பெரியார் பெருந்தொண்டர்கள் தாமஸ், விடுதலைகிருட்டிணன், செங் குட்டுவன், கணேசன், ஜெயக் குமார், அன்பழகன் உள்ளிட்ட திராவிடர் கழகத் தோழர்களும், உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொண்டனர்.
அதன்பிறகு இலட்சுமணன் உடல் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடையாக வழங்குவதற்காக வாகனத்தில் ஏற்றும்போது தோழர்கள் வீரவணக்கம் வீர வணக்கம் என்று முழக்க மிட்டனர். தொடர்ந்து திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்து வக்கல்லூரி மருத்துமனையில் திருச்சி மாவட்ட கழக தலைவர் ஞாஆரோக்கியராஜ் முன்னி லையில் இலட்சுமணனின் துணைவியாரும், மகன்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரக் குழந்தைகள் உறவினர் கள் இலட்சுமணன் உடலை ஒப்படைத்தனர்.
இந்தநிகழ்வில் மாநகரத் தலைவர் துரைசாமி, மாநகர அமைப்பாளர் கனகராசு, காட்டூர் கிளைக்கழகத் தலை வர் சங்கிலிமுத்து, பெல் ஆறு முகம், பெல் அசோக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இலட்சுமணன் இறுதி விருப் பப்படி நடத்தி கொண்ட திரா விடர் கழக தோழர்களுக்கு அவரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
மறைந்த பெரியார் உணர்வாளர் இலட்சுமணனின் ஒரு மகன் மருத்துவர் – மருமகளும் மருத்துவர். மற்றொரு மகனும்- மருமகளும் பொறியாளர்கள், மகளும் பொறியியல் பட்ட தாரி ஆவார்.