அருப்புக்கோட்டை, மே 19 – அருப்புக்கோட்டை திராவிடர் கழக இளைஞரணி சார்பில், மதுரைச் சாலை தி.சு.ராமலிங்கா நகர் வளைவு எதிரில், 17.5.2024 வெள்ளி மாலை 6 மணிக்கு, சுயமரியாதை இயக்கம் குடிஅரசு நூற் றாண்டு விழாப் பரப்பு ரைக் கூட்டம் தொடங்கியது.
மாவட்ட கழக இளை ஞரணித் தலைவர் இரா.அழகர் தலைமையில், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைத் தலைவர் ந.ஆனந்தம், மாவட்ட கழக செயலா ளர் விடுதலை தி.ஆதவன், துணை அமைப்பாளர் பெ.சந்தனம் ஆகியோர் முன்னிலையில், நகர கழக செயலாளர் பா.இராசேந்திரன் வரவேற் புரையாற்றினார்.
சாத்தூர் நகர் மன்றத் துணைத் தலைவரும், மாவட்ட ப.க. அமைப்பாளருமான பா.அசோக், மாவட்ட கழகத் தலைவர் கா.நல்ல தம்பி ஆகியோரது உரைக்குப் பின், கழகச் சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு வரலாறு குறித்தும், குடிஅரசு இதழ் சிறப்பு குறித்தும், தொட ரும் திராவிட மாடல் அரசு சாதனைகளையும் விளக்கி நிறைவுரையாற்றினார்.
தி.மு.க. பொறுப்பாளர்கள் யோ.இளம்பாரதி, தங்கமணி, முன்னாள் இலக்கிய அணி பொறுப்பாளர் பி.மாணிக்கம், மாவட்ட கழக இளைஞரணி அமைப் பாளர் ந.ஆசைத்தம்பி, திருவில்லிபுத்தூர் ஒன் றிய கழக அமைப்பாளர் கு.போத்திராசு, அருப்புக் கோட்டை ஒன்றிய கழக செயலாளர் இரா. முத் தையா, பொ.கணேசன், மு.முனியசாமி, முத்துக் குமார், சங்கரராஜ் இளைஞரணித் தோழர் கள் மு.புகழேந்தி, இரா.பிரபாகரன் மற்றும் தோழமை இயக்கத் தோழர் கள் பங்கேற்றுச் சிறப்பித் தனர். இறுதியாக நகர கழக இளைஞரணித் தலை வர் க.திருவள்ளுவர் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.