கணியூர் க.கிருஷ்ணன் இல்ல மணவிழா அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்று வாழ்த்து

2 Min Read

கணியூர், மே 19- தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கணியூர் க.கிருஷ்ணன்-சரசுவதி ஆகியோரின் மகன் மாவட்டஇளைஞரணி தலைவர். ச.கி. இளந்தென்றல், கொடைக் கானல் ப.முருகன்-பெ.அகிலாண்டேசுவரி ஆகியோரின் மகள் அ.மு.மதுமிதா ஆகியோரது வாழ்க்கை இணை ஏற்பு வரவேற்புவிழா 18-05-2024 – சனி இரவு 7 மணியளவில் கணியூர் ஏ.ஆர்.சி திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது.

ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, செல்வராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி அமைப் பாளர் க.செல்வராஜ், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, பொள்ளாச்சி நாடாளு மன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.ஈஸ் வரசாமி, தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா. இளவரசன், தாராபுரம் கழக மாவட்ட செயலாளர் தம்பி. பிரபாகரன் ,பொதுக்குழு உறுப்பினர்கள் கே.என்.புள்ளியான், மயில் சாமி, கனரா வங்கி மேலாளர்ஓய்வு பரமசிவம், மாவட்டத் துணைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் இனியா, மாவட்ட பக தலைவர் தி. வெங் கடாசலம், மாவட்ட பக துணைத் தலைவர் முருகேசன், மாவட்ட பக துணைச் செயலாளர் வெள்ளகோயில் பெரியார்ஜெகன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சிவகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழ்நில வன், தாராபுரம் நகர இளைஞரணி செயலாளர் முனீஸ்வரன், நகர பக அமைப்பாளர் பெரியார்நேசன், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் தங்கவேல், மடத்துக்குளம் ஒன் றிய அமைப்பாளர் செல்வராஜ், மடத்துக் குளம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சதீஷ்குமார், மடத்துக்குளம் ஒன்றிய இளை ஞரணி தலைவர் முருகானந்தம், உடுமலை ஒன்றிய தலைவர் பெரியார்பித்தன், காரத் தொழுவு கிளைக் கழக அமைப்பாளர் நாக ராசன், சோத்தம்பட்டி ஆறுமுகம், தாராபுரம் வழக்குரைஞர் சக்திவேல், சங்கர் திராவிடன், கணியூர் ராமசாமி ராதாகிருஷ்ணன், வேலு மணி, அர்ச்சுனன், கண்ணன், பொள்ளாச்சி கழக மாவட்ட காப்பாளர் பொறியாளர் பரமசிவம், மாவட்டத் தலைவர் மாரிமுத்து, மாவட்டத் துணைத் தலைவர் செழியன், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், திருப்பூர் மாவட்ட தலைவர் யாழ். ஆறுச்சாமி, அலங்கியம் தோழியர் உமா, செல்வி, விசிக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் முத்தமிழ்வேந்தன், உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை

மணவிழாவின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 5,000 மணமக்கள் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கி மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *